சம்பவம் செய்தி

தமிழ்நாடு

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அறவை மில்லில் பதுக்கியிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை, பறக்கும்படை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கூடுதலாக அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில், முறைகேடாக ரேஷன் அரிசி மூட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்ட பறக்கும்படை தாசில்தார் அன்பழகன் தலைமையிலான குழுவினர், விருத்தாசலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, விருத்தாசலம், ஆலடி சாலையில் உள்ள காம்ப்ளக்ஸ் வாசலில் கேட்பாரற்று கிடந்த 100 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து, அங்கிருந்த தனியார் அறவை மில்லில் சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைத்திருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். மில் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, எச்சரிக்கப்பட்டது.இதே மில்லில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, 300 கிலோ அரிசியும் பெரியார் நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர் முரளி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X