பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி கடைப்பிடிக்க ஏற்பாடு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை: சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், மாதவரத்தில் ஒதுக்கப்பட்ட கடைகளில், திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால், கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த தவறியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில், தற்காலிக பழ மார்க்கெட் இயங்கி வருகிறது.

சென்னை கோயம்பேடில், பழ மொத்த விற்பனை செய்து வந்த வியாபாரிகளுக்கு மட்டும், இங்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத் துறையின் டான்ஹோடா விற்பனை நிலையத்திற்கும், 10 கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இங்கு கடைகள் நெருக்கமாக இருந்ததால், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் எழுந்தது.கோயம்பேடு மார்க்கெட் போன்று, கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவானது.

இதையடுத்து, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட கடைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். ஒரு கடைக்கு, ஒரு கடை காலி விட்டு, வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒதுக்கிய கடைகளுக்கு பதிலாக, புதிய கடைகள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், டான்ஹோடாவிற்கு ஒதுக்கப்பட்ட கடைகள் எண்ணிக்கை, ஐந்தாக குறைக்கப்பட்டு உள்ளது.

காலி இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகளவில் வரும் பொருட்களை, அங்கு குவித்து வைத்து விற்பனை செய்யும் நடவடிக்கைகளில், சில வியாபாரிகள் இறங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X