விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் சீல்வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் 'சீல்'வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

Added : ஜூன் 17, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் - புதுச்சேரி எல்லையில் நேற்று சீல் வைக்கப்பட்டதால், தமிழக மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால், தமிழக மக்கள் வந்து செல்வதைத்தடுக்க புதுச்சேரி மாநில எல்லையில் சீல் வைக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார். அதன்படி, தமிழக - புதுச்சேரி எல்லையான, மதகடிப்பட்டில் நேற்று சாலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.இங்கு, புதுச்சேரி போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை விசாரித்து பிரசவம், டையாலிசிஸ் நோயாளிகளை மட்டுமே அனுமதித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிற தேவைகளுக்காகச் சென்ற பொதுமக்களை அனுமதிக்காமல் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், தமிழக வாகனங்கள், புதுச்சேரி எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, திரும்பிச்சென்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X