சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யுடன் கைகலப்பு: வழக்கறிஞர் மீது வழக்கு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

வேளச்சேரி: முக கவசம் அணியாததற்கு, அபராதம் விதித்ததால் ஏற்பட்ட தகராறில், உதவி ஆய்வாளருடன் கைகலப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரி, ஏரிக்கரை சிக்னலில், வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விமல் மற்றும் மாநகராட்சி அதிகாரி ஈஸ்வரன் தலைமையிலான பறக்கும் படை, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டது.அப்போது, ஒரு காரில் வந்த இருவர், முக கவசம் அணியாமல் பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் காரை மடக்கி, அவர்களுக்கு அபராதம் விதிக்க முயன்றனர்.

அப்போது, காரில் இருந்த ஒரு நபர், தன்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எனக் கூறி, அபராதம் செலுத்த மறுத்துள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில், வழக்கறிஞர் சிவகோபாலன், 32, என்பவரும், உதவி ஆய்வாளர் விமலும், ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஆத்திரமடைந்த சிவகோபாலன், விமல் சட்டையை பிடித்து, கீழே தள்ளி உள்ளார். தடுக்க முயன்ற, ஆயுதப்படை காவலர்களையும் அடிக்க பாய்ந்துள்ளார்.

இதையடுத்து, சிவகோபாலன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ், 37, ஆகியோரை, போலீசார், வேளச்சேரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.முக கவசம் அணியாதது, ஆபாசமாக திட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X