பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வீரருக்கு கொரோனா9 வீரர்கள் தனிமைப்படுத்தல்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரத்தில் தீயணைப்பு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மற்ற 9 பேர் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியும், தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, அவருடன் பணிபுரிந்த மற்ற 9 தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவிற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.தீயணைப்பு அலுவலகத்தில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில், தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு, மாவட்டத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, மாற்றுப் பணிக்கு தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில், நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X