விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 17, 2020
Share

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்து நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை, தொற்றினால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் போனில் பேசி நலம் விசாரித்து, தேவையான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து நோய் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவில் வீடு திரும்பலாம் என நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.நோய் தொற்று கண்டறியும் பரிசோதனை மையத்திற்கு சென்று பார்வையிட்டு டாக்டர்கள், லேப் டெக்னீஷியன்களையும், பணியாளர்களையும் பாராட்டினார்.

பின்னர், கலெக்டர் தலைமையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்தும், நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கியும் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.மருத்துவக்கல்லுாரி டீன் குந்தவி தேவி, ஏ.டி.எஸ்.பி., சங்கர், சுகாதாரத் துறை இணை இயக்குனர் செந்தில் குமார், தாசில்தார் பார்த்திபன், மருத்துவ கண்காணிப்பாளர் சுப்ரமணியன், ஆர்.எம்.ஓ., சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X