பொது செய்தி

தமிழ்நாடு

மாறுகிறதா! சமூக தொற்றாக கொரோனா பரவல்...அதிகாரிகளின் கடும் நடவடிக்கை தேவை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே வாரத்தில் மூன்று பேர் இறந்துள்ளதால்,கொரோனா சமூக தொற்றாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொற்று பரவலைத் தடுக்கஅதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்நோய் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு, இறப்பும் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 2 மூதாட்டிகள் கொரோனா தொற்றால் இறந்தனர். ஒரே வாரத்தில் 3 பேர் இறந்ததால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலில், டில்லி தப்லிக் மாநாட்டிற்குச் சென்று வந்த நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின், கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வந்த நபர்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டது.இவர்களை தனிமைப்படுத்தியதால், மாவட்டத்தில் பாதிப்பு பெருமளவு குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பொது மக்கள் அரசு அறிவுறுத்திய சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியமாக உள்ளனர்.

வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணியாமல் செல்வது மற்றும் பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நிற்பது அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பொதுமக்களுக்கு சமூக தொற்றாக மாறியுள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வந்த நபர்களுக்கு இணையாக தொற்று பரவி வருவதால் சமூக தொற்றாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், காரணை, கவரை, கண்டாச்சிபுரம், அன்னம்பாக்கம், இருவேல்பட்டு, திருவம்பட்டு, விழுப்புரம் புதுத்தெரு, திண்டிவனம், ஒட்டம்பட்டு, தொரவி, மூங்கில்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இது மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று பரவலைத் தடுக்க, ஊரடங்கை தீவிரப்படுத்தவும், அரசு விதிமுறைகளை மீறும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தொற்று பரவலைத் தடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X