தமிழ்நாடு

குப்பை கொட்டும் இடமா போரூர் ஏரி?

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 குப்பை கொட்டும் இடமா போரூர் ஏரி?

போரூர்: சென்னையின் குடிநீர் ஆதாரமான போரூர் ஏரியை, குப்பை, கழிவுகள், ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுமையாக மீட்டு, மேம்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

நீர்நிலைகளை துார்வார, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, கடந்த ஆண்டு, நம் நாளிதழில், தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த வரிசையில், போரூர் ஏரியின் அவலம் குறித்தும், செய்தி வெளியிடப்பட்டது.போரூர் ஏரியின் பரப்பளவு, 800 ஏக்கர் என கூறப்பட்டாலும், 330 ஏக்கருக்கு மட்டுமே, வருவாய் துறை ஆவண சான்றுகள் கிடைத்துள்ளன.

ஏரியின் குறுக்கே, சென்னை புறவழிச்சாலை அமைத்து, ஏரியை துண்டாக்கியது தேசிய நெடுஞ்சாலைத் துறை. இதை சாதகமாக்கி, ஏரியின் இரு பகுதிகளையும் கூறு போட்டு விற்றனர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்.போரூர் ஏரிக்குள், அம்பேத்கர் நகர், எம்.ஜி. ஆர்., நகர் சமத்துவ நகர், அண்ணா நகர், பெரியார் நகர், என, பல நகர்கள் உருவாகி விட்டன. இவை தவிர, கோவில்கள், பள்ளிகள், சர்ச்சுகளும் கட்டப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2012ல், போரூர் ஏரியை சீரமைக்க, சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், ஏரியை, 12 அடிக்கு துார் வாரி, 5 கி.மீ., துாரம் கரை அமைத்து, கரையின் மீது தார்ச்சாலையும் அமைக்கப்பட்டது. ஏரியை சுற்றிலும் வேலி, நுழைவாயில், இரும்பு கேட் அமைத்து, ஆக்கிரமிப்புக்கான வழி தடுக்கப்பட்டது.இந்த பணிகளுக்கு, 20 கோடி ரூபாயும், ஏரி கலங்கல் சீரமைப்பு, உபரிநீர் செல்லும் கால்வாய் சீரமைப்புக்கு, 25 கோடி ரூபாயும் செலவிடப்பட்டது.

புதிதாக ஏரிக்கரை அமைக்கும் முன், வருவாய் துறையிடம் விண்ணப்பித்து, ஏரி நிலத்தை நில அளவை செய்து, உரிய அளவீடு செய்யப்பட்டது.ஆனால், ஏரியை முறையாக துார் வாராமல், மணல் உள்ள பகுதிகள் மட்டும் பள்ளம் தோண்டப்பட்டு, மணல் விற்பனை செய்யப்பட்டது என, குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஏரி முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்பட்டன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.

அய்யப்பன்தாங்கல் கிராமத்தில் சேகரமாகும் குப்பை கழிவுகள், கொளுத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியின் உள்வாய் பகுதியில் கொட்டப்படுகின்றன.இதனால், போரூர் ஏரி நீர் மாசடைந்து வருகிறது. அவ்வப்போது, பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை, மர்மநபர்கள் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் நச்சுக்காற்றால், அப்பகுதி மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்தும், நமது நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. ஆனால், இந்த பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

கடந்த, 2015ம் ஆண்டு, 4.6 கோடி கன அடி கொள்ளளவில் இருந்த போரூர் ஏரியை துார் வாரி, 7 கோடி கன அடி நீரை சேமிக்கும் அளவிற்கு ஆழப்படுத்தப்பட்டது.மேலும், 2017ம் ஆண்டு, போரூர் ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.தற்போது, மழை பெய்யாததாலும், கோடை வெயில் தாக்கத்தாலும், குடிநீர் தேவைக்கு கைகொடுக்க முடியாத அளவிற்கு, ஏரியில் தண்ணீர் இருப்பு, 20 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஏரியில் குப்பை கொட்டப்படுவது குறித்து, குன்றத்துார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம், பல முறை புகார் அளித்தும், எந்த பயனும் ஏற்படவில்லை.'ஏரியில் தற்போது நீர் இருப்பு, 20 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதங்களில் ஏரியின் நீர் இருப்பு, இதைவிட அதிகமாக இருந்தது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202023:35:34 IST Report Abuse
தல புராணம் சாவுங்க, நல்லா சாவுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X