பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் நலனுக்கான சேவை விருதுவிண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விழுப்புரம் : மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:சமூக நலம் மற்றும் மகளிர் நலம் 2020ம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா கொண்டாடும்போது பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் சமூக சேவை புரிந்திருக்க வேண்டும்

.விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடனும் அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலக அறை எண்.26ல் நேரில் சமர்ப் பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X