பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வாகனங்களுக்கு இ-பாஸ்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

மரக்காணம்: சென்னையில் இருந்து இ.சி.ஆர்., வழியாக வரும் வாகனங்களை இ-பாஸ் இன்றி செல்ல மரக்காணம் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக வரும் வாகனங்கள் இ-பாஸ் இன்றி வந்தால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில், நேற்று காலை சென்னையில் இருந்து இ.சி.ஆர்., சாலை வழியாக புதுச்சேரி செல்லும் வாகனங்களை தேன்பாக்கம் எல்லையில் உள்ள விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

இதில் சில கார்களை இ-பாஸ் இல்லாமல் விழுப்புரம் மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல போலீசார் அனுமதித்து வருகின்றனர். அவர்களை கனகசெட்டிக்குளத்தில் உள்ள புதுச்சேரி மாநில போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். இது குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X