வேலுார் அதிகாரிகள் சென்னை செல்ல திடீர் தடை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலுார் அதிகாரிகள் சென்னை செல்ல திடீர் தடை

Added : ஜூன் 17, 2020
Share

வேலுார்; வேலுார் மாநகராட்சி அதிகாரிகள், சென்னை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலுார் மாநகராட்சி அலுவலகத்தில், பணியாற்றி வந்த, 36 வயது உதவி பொறியாளர், சென்னை சென்று திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதனால், மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து, நேற்று சுத்தம் செய்யப்பட்டது. மாநகர நல அலுவலர் சித்ர சேனா கூறுகையில், ''அலுவலக பணி காரணமாக, வேலுார் மாநகராட்சி அதிகாரிகள், சென்னை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதாவது கூட்டம் என்றால், 'ஜூம் ஆப்' மூலமாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X