பாதிப்பு, குணம், இறப்பில் முந்தும் வடசென்னை| Dinamalar

தமிழ்நாடு

பாதிப்பு, குணம், இறப்பில் முந்தும் வடசென்னை

Added : ஜூன் 17, 2020
Share
 பாதிப்பு, குணம், இறப்பில் முந்தும் வடசென்னை

சென்னை : தொற்று பாதிப்பு, குணமடைவோர், இறப்பு விகிதத்தில், வடசென்னை வேகமாக முந்தி வருகிறது.

தமிழகத்தில் ருத்ரதாண்டவமாடி வரும் கொரோனா தொற்றால், தலைநகர் சென்னை திணறி வருகிறது. இங்கு, நேற்றுடன் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 34 ஆயிரத்து, 245 ஆக உயர்ந்துள்ளது.துவக்கம் முதலே, ராயபுரத்தில் தொற்றின் வீரியம், அதிவேகமாக பரவி வருகிறது. இங்கு, அதிகபட்சமாக, 5,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டை, 4,370; திரு.வி.க., நகர், 3,041; அம்பத்துார், 1,190; மாதவரம், 922; திருவொற்றியூர், 1,258; மணலி, 483 என, ஏழு மண்டலங்களை உள்ளடக்கிய, வடசென்னையின் மொத்த பாதிப்பு, 16 ஆயிரத்து, 750 ஆகவும், சதவீத அடிப்படையில், 48.91 என்ற அளவில் உள்ளது.

அண்ணாநகர், 3,431; தேனாம்பேட்டை, 4,143; கோடம்பாக்கம், 3,648; வளசரவாக்கம், 1,444; ஆலந்துார், 699; அடையாறு, 1,931; பெருங்குடி, 646; சோழிங்கநல்லுார், 639, என, தென்சென்னையில், 16 ஆயிரத்து, 581 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது, 48.41 சதவீதமாகும்.தொற்று பாதிப்பில் இருந்து, 18 ஆயிரத்து, 565 பேர் மீண்டுள்ளனர். இது, 54.21 சதவீதமாகும். அதிலும், வடசென்னையே முன்னணியில் உள்ளது.

அதன்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக, 3,296.தண்டையார்பேட்டையில், 2,210; திரு.வி.க.நகரில், 1,804 என, ஏழு மண்டலங்களில், 9,381 பேர் குணமடைந்துள்ளனர். இது, மொத்த குணமடைந்தோரில், 50.63 சதவீதமாகும்.சென்னையில், 15 ஆயிரத்து, 257 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். இது சதவீத அடிப்படையில், 44.55 என, கணக்கிடக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் மட்டும், 7,176 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது, 47.03 சதவீதமாகும். மேலும், உயிரிழந்த, 422 பேரில், 243 பேர் வடசென்னையை சேர்ந்தவர்களாவர்.தென்சென்னையில், 8,932 பேர் குணமடைந்த நிலையில், சதவீதம், 48.38 எனவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 7,424 ஆகவும், சதவீதம், 48.65 ஆகவும், உயிரிழப்பு, 175 என்ற அளவில் உள்ளது.

சென்னையில் சிகிச்சை பெறும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த, 914 பேரில், 202 பேர் குணமடைந்த நிலையில், 707 பேர் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு, நான்காக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X