கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கைதிகளை விடுவிக்க வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

மதுரை; சிறை கைதிகளை விடுவிக்க கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.மதுரையைச் சேர்ந்த செந்தில் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு:

சென்னை புழல் சிறையில், சில கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிறைகளில், கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை.இங்கு, கொரோனா பரவலை தடுக்க, சிறு குற்ற வழக்குகளில் கைதானவர்களை, பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும்.ஆயுள் தண்டனை கைதிகளில், 10 ஆண்டுகள் பூர்த்தியானவர்கள், ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ள கைதிகளை, பரோலில் செல்ல அனுமதிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பில், 'ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசு தான் முடிவெடுக்க வேண்டும்' எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X