சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில் எம்.எல்.ஏ., காத்திருப்பு போராட்டம்

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

நாகப்பட்டினம்; வெளிநாடுகளில் இருந்து, சென்னை திரும்பி, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களை, வீடுகளுக்கு அனுப்பி வைக்க கோரி, நாகை தொகுதி, எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து, தமிழகம் திரும்பிய, 175 பேர் சென்னை, கேளம்பாக்கம் அரசு கொரோனா சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், 130 பேருக்கு தொற்று இல்லை என்பதால், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மீதமுள்ள, 40 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன், ஒருவர், நேற்று ஒருவர் என, இருவர் முகாமில் இறந்தனர்.

இதையடுத்து, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலரும், நாகை தொகுதி, எம்.எல்.ஏ.,வுமான தமிமுன் அன்சாரி, வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள தன் வீட்டின் வாசலில் அமர்ந்து, நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து, தமிழகம் திரும்பும் பயணியரை, மூன்று நாட்கள் முகாமில் வைத்து, ஆய்வில் தொற்று இல்லை என வந்தால், வீடுகளுக்கு அனுப்பி வைத்து தனிமைப்படுத்த வேண்டும்.தமிழர்கள், தாயகம் திரும்ப, கூடுதலான விமான சேவையை, மத்திய அரசு வழங்க வேண்டும். நெருக்கடியான நேரத்தில், சொந்த செலவில் தாயகம் திரும்புபவர்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது.இப்பிரச்னைகளை கையாள, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான வாரியத்தை உயிரூட்டி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-ஜூன்-202020:20:20 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இவர் சொல்லும் தமிழர்கள் அனைவரும் குருவிகளாகச் சென்ற கடத்தல் கிரிமினல்கள்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
18-ஜூன்-202016:04:53 IST Report Abuse
Baskar இந்த எம்.எல்.எ க்கு வரும் தேர்தலில் காத்திருப்பு தான். எவனும் சீட் தர மாட்டான்.
Rate this:
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202015:53:33 IST Report Abuse
nan அடுத்த stalin
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X