திருப்பி அடிப்போம் 'ஜாக்கிரதை!':சீனாவுக்கு எச்சரிக்கை

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை மீறி ஆக்கிரமித்து, நம் வீரர்கள் மீது தாக்குதலையும் நடத்தி, ௨௦ வீரர்களின் மரணத்திற்குக் காரணமான சீனாவை, நேற்று நம் பிரதமர் மோடி, கடுமையாக எச்சரித்தார். ''இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எங்களை சீண்டினால், திருப்பி அடிப்போம்; ஆத்திரமூட்டினால் பொறுக்க மாட்டோம்.வீர மரணம் அடைந்த, 20 வீரர்களின் உயிர் தியாகம்
india china, border dispute, india china border, ladakh stand off, திருப்பி அடிப்போம் 'ஜாக்கிரதை!':சீனாவுக்கு  எச்சரிக்கை


புதுடில்லி : இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை மீறி ஆக்கிரமித்து, நம் வீரர்கள் மீது தாக்குதலையும் நடத்தி, ௨௦ வீரர்களின் மரணத்திற்குக் காரணமான சீனாவை, நேற்று நம் பிரதமர் மோடி, கடுமையாக எச்சரித்தார். ''இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எங்களை சீண்டினால், திருப்பி அடிப்போம்; ஆத்திரமூட்டினால் பொறுக்க மாட்டோம்.வீர மரணம் அடைந்த, 20 வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது,'' என, நேற்று மோடி பேசினார்.


latest tamil newsஎல்லையில் நிலவும் பதற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கும், அழைப்பு விடுத்துள்ளார். அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் இடையே, 3,488 கி.மீ., துார எல்லை பகுதி உள்ளது. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதியிலும், காஷ்மீரின் லடாக் எல்லை பகுதியிலும், சீன ராணுவம், அவ்வப்போது வாலாட்டுவதை வழக்கமாக வைத்து
உள்ளது. லடாக்கில், நம் நாட்டின் எல்லை பகுதிக்குள் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை, நம் ராணுவம், கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தது; இதற்கு, சீனா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


சுமுக தீர்வுகடந்த மாதம், இந்த பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றபோது, நம் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தியதை அடுத்து, பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது.
ராணுவ அதிகாரிகள் மட்டுமல்லாமல், இரு நாட்டு துாதரக அதிகாரிகளும், தொடர்ந்து பேச்சு நடத்தினர். இதையடுத்து, எல்லை பிரச்னைக்கு பேச்சு மூலமாகவே சுமுக தீர்வு காணலாம் என, முடிவு செய்யப்பட்டது.இதை ஏற்று, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து, சீன ராணுவம் பின்வாங்கத் துவங்கியது; நம் ராணுவமும் பின் வாங்கியது. இந்நிலையில், லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே, 15ம் தேதி இரவில், திடீரென மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும், பெரிய கற்கள், இரும்பு கம்பிகளால் பலமாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்ததாக, நம் ராணுவம் நேற்று முன்தினம் இரவு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.இந்த, 20 வீரர்களின் பெயர்களை, இந்திய ராணுவம் நேற்று அறிவித்தது. மேலும் நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், சீன ராணுவம் தரப்பில், 43 வீரர்கள் இறந்து விட்டதாக, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன அரசு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சீன ராணுவத்தின் இந்த அட்டூழியத்தை அடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று, முப்படைகளின் தளபதிகளுடனும், ராணுவ உயர் அதிகாரிகளுடனும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.இதன் தொடர்ச்சியாக எல்லையில் நிலவும் சூழல் குறித்து, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். எல்லை பகுதியில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, 15 மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டம் துவங்குவதற்கு முன், எல்லையில் உயிர் தியாகம் செய்த, 20 வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் எழுந்து நின்று, பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, எல்லை பிரச்னை குறித்து அவர் பேசியதாவது:இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எங்களை சீண்டினால், அத்துமீறலில் ஈடுபட்டால், தக்க பதிலடி கொடுப்போம்; திருப்பி அடிப்போம். அதற்கான சக்தியும், திறமையும் எங்களுக்கு உண்டு. நாட்டின் இறையாண்மையும், ஒற்றுமையும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதில், எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் இல்லை. நம் சக்தியையும், பலத்தையும் ஏற்கனவே பலமுறை நிரூபித்து காட்டியுள்ளோம். சக்திவாய்ந்த நாடான இந்தியா மீது, அவநம்பிக்கை வேண்டாம். நம் வீரர்களின் வீரத்தின் மீது, முழு நம்பிக்கை உள்ளது. அடுத்தவர்கள் விவகாரத்தில் எப்போதும் நாங்கள் அத்துமீறலில் ஈடுபட்டது இல்லை. அதேநேரத்தில் எந்த மாதிரியான சூழல் நிலவினாலும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

நம் வீரர்கள், 20 பேரின் உயிர் தியாகம் வீண் போகாது. தியாகமும், அமைதியும் எங்கள் குணாதிசயம். ஆனால், வலிமையும், துணிச்சலும் எங்கள் குணாதிசயத்தில் உள்ளது என்பதை, யாரும் மறந்து விடக் கூடாது. இவ்வாறு, பிரதமர் பேசினார். சீன எல்லையில் நிலவும் பிரச்னை குறித்து, பிரதமர் மவுனம் காப்பதாக, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், சீனாவுக்கு கடுமையான
எச்சரிக்கை விடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார்.


அனைத்து கட்சி கூட்டம்சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்தும், இந்திய வீரர்கள், 20 பேர் இறந்தது குறித்தும் விவாதிப்பதற்காக, நாளை மாலை, 5:00 மணிக்கு, அனைத்து கட்சி கூட்டத்தை, பிரதமர் மோடி கூட்டியுள்ளார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இந்த கூட்டம் நடக்கவுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடி, பிரதமர் இதில் பங்கேற்கவுள்ளதாகவும், அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்கவுள்ளதாகவும், பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானதாம்எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:லடாக் அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி, சீனாவுக்கு சொந்தமானது; அந்த பகுதி, எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை விட்டுக் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரம் குறித்து துாதரக ரீதியாகவும், ராணுவ அதிகாரிகள் வழியாகவும், ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம்.

சரியோ, தவறோ; மோதல் நடந்தது சீனாவுக்கு சொந்தமான பகுதி. எனவே, இந்த மோதலுக்கு எங்கள் மீது பழி சுமத்த முடியாது. இந்த மோதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுவது குறித்து, நான் எதுவும் கூற முடியாது. எல்லையில் உள்ள வீரர்கள், அந்த பிரச்னையை கையாளுகின்றனர். தற்போது, எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இனியும் மோதலைத் தொடர, சீனா விரும்பவில்லை. இந்தியாவும், சீனாவும், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். எனவே, கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, மக்களின் நலனுக்காகவும், எதிர்பார்ப்புக்கு ஏற்பவும், இரு நாடுகளும் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் நிலை.இவ்வாறு, அவர் கூறினார்.

சீன எல்லையில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது, மன உளைச்சலையும், வேதனையையும் தருகிறது. இந்த மண்ணை காப்பதற்காக, தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இவர்களது தியாகத்தையும், துணிச்சலையும், நாடும், நாட்டு மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக, நாடே துணை நிற்கும். ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,


தயார் நிலையில் முப்படையினர்


சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படை தளபதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது ராணுவம், கடற்பை, விமானப்படை என முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
எல்லையில் கூடுதல் வீரர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு உள்ள நிலையில் கடற்படை மற்றும் விமானப்படையினரும், கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.எல்லையில் வீர மரணம் அடைந்த 20 வீரர்களுக்கும் சல்யூட் அடிப்பதாக தெரிவித்துள்ள இந்திய ராணுவம் இவர்களது தியாகம் வீண் போகாது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.


அனைத்துக்கட்சி கூட்டம்


சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்தும், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் குறித்தும் விவாதிக்க நாளை மாலை 5:00 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடக்கவுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடியே இதில் பங்கேற்கவுள்ளதாகவும், அனைத்துக்கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்க உள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
20-ஜூன்-202010:39:25 IST Report Abuse
Abdul Rahman சும்மா இப்போதைக்கு இரண்டு நாட்களுக்கு வீர வசனம் பேசிவிட்டு, சில நாள் கழித்து மறந்து விடக்கூடாது. இந்த உறுதி எப்போதும் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Aswini Kumar - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202023:50:34 IST Report Abuse
Aswini Kumar நான் இன்று முதல் என்னுடைய குடும்பத்தில் இருந்து சீனா தயாரிப்புகளை வாங்குவதையும், பேடிஎம் மற்றும் ஓலா உபயோகப்படுத்துவதையும் உடனடியாக நிறுத்துகிறேன் என்று உறுதி மொழி எடுத்திருக்கிறேன். நாம் அனைவரும் இதன் மூலம் சீனா பொருட்களின் சந்தையாக இந்தியா இருப்பதை மாற்ற முடியும் என்பது என் பணிவான கருத்து.
Rate this:
Cancel
Raj - chennai,இந்தியா
19-ஜூன்-202014:59:49 IST Report Abuse
Raj Mr. Modi where is the surgical strike show you made....oh, election is not nearing right.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X