பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் சாரல் நீர்மட்டம் உயரவில்லை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

தேக்கடி; பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த போதிலும் நீர்மட்டம் உயரவில்லை.தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ல் துவங்கியது.

அப்போது அணையின் நீர்மட்டம் 112.75 அடி இருந்தது. தற்போது வரை நீர்ப்பிடிப்பில் கன மழையின்றி சாரல் மழையாகவே பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து 125 கன அடிக்கு மேல் அதிகரிக்கவில்லை.நேற்று காலை நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 6.8 , தேக்கடியில் 3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீருக்காக 125 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1287 மில்லியன் கன அடியாகும். தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த போதிலும் நீர்வரத்தைக் காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து 112.35 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. வைகை அணையின் நீர்மட்டம் 36.35 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து இல்லை. நீர்திறப்பு 72 கன அடியாகும். நீர் இருப்பு 688 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X