குடியிருப்பில் காய்கறி மார்க்கெட்: அச்சத்தில் ஸ்ரீவி.,மேலரதவீதி மக்கள்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் மேலரதவீதி தற்காலிக காய்கறி மார்கெட்டில் அதிகரிக்கும் மக்களால் சமூக இடைவெளியும் அறவே இல்லாததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கொரோனா அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் மேலரதவீதிக்கு மாற்றப் பட்டது. இங்குள்ள கடைகள் போதிய இடைவெளியின்றி இருப்பதால், காய்கறி வாங்கவரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று காய்கறி வாங்குகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களால் தங்கள் பகுதியில் கொரோனா பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

குடியிருப்புபகுதிகளில் இது போன்ற மார்க்கெட் செயல்பட செய்தது அதிகாரிகளின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. ஒதுக்குபுறத்தில் மார்க்கெட்டை மாற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X