கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை: பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடுத்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகையும் விதித்தது.தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் செயலர், இமானுவேல் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், பல்வேறு ஆலோசனைகளை, வழிமுறைகளை பிறப்பித்துள்ளன.

ஊரடங்கு பற்றியோ, ஆரோக்கியமான மனிதர்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது பற்றியோ, எதுவும் கூறவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றவும், வைரஸ் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துவது பற்றியும் தான், வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ரத்துஅடிப்படை உரிமைகளை நசுக்கி விட்டு, ஊரடங்கை நீட்டிப்பதில் நியாயமில்லை.சமூக இடைவெளியை பின்பற்றி, அரசியல், மத நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கலாம். எனவே, பொது மக்கள் நடமாட்டம் மற்றும் அரசியல், சமூக, மத ரீதியிலான நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்தி வேல் வாதாடியதாவது:தமிழகத்தில், பேரிடர் மேலாண்மை திட்டம் எதுவும் இல்லை. எதேச்சையாக, ஊரடங்கை அமல்படுத்துவதை ஏற்க முடியாது. அதிக வைரஸ் தொற்று உள்ள மஹாராஷ்டிரா, டில்லி மாநிலங்களில் ஊரடங்கு இல்லை.தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவர் குழு, தொற்று நோய் தடுப்பு நிபுணர்கள் அடங்கிய குழு அல்ல. தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் அல்லாமல், மற்ற மருத்துவர்களிடம் கருத்து கேட்டு, எடுக்கப்படும் முடிவு சரியாக இருக்காது.இவ்வாறு, அவர் வாதாடினார்.

தமிழக அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, 'மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ள, சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் நலன் கருதி'மருத்துவ நிபுணர்கள் குழு கருத்தின் அடிப்படையில், அரசு முடிவெடுத்துள்ளது. இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றனர்.இதையடுத்து, 'ஊரடங்கை அமல்படுத்துவதும், விலக்குவதும் அரசைப் பொறுத்தது; அசாதாரண சூழ்நிலையில், மக்கள் நலன் கருதி, அரசு முடிவெடுக்கிறது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு தொடுத்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகையும் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X