தாயின் மருத்துவ செலவுக்காக கொரோனா உடலை சுமக்கும் மாணவர்

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தாயின் மருத்துவ செலவுக்காக  கொரோனா உடலை சுமக்கும் மாணவர்

புதுடில்லி டில்லியில், தாயின் மருத்துவ செலவுக்காகவும், குடும்பத்தினரின் உணவுக்காகவும், கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை, மயானம் கொண்டு சேர்க்கும் பணிகளை, பிளஸ் 2 மாணவர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார். டில்லியில், சீலாம்பூரை சேர்ந்த, மருத்துவம் படிக்க விரும்பும், பிளஸ் 2 மாணவர் சந்த் முகமது, 20.
'தைராய்டு' பிரச்னைகொரோனா வைரஸ் குறித்து, பலரும் அச்சம் கொண்டுள்ள நிலையில், சந்த் முகமது, வறுமை காரணமாக, கொரோனாவால் பலியான உடல்களை கையாள்கிறார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:

என் வீட்டில், பெற்றோர், இரு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். 'தைராய்டு' பிரச்னையில் சிகிச்சை பெறும் தாய்க்கு, மருத்துவ செலவுகள் உள்ளன.
மூத்த சகோதரர், ஊரடங்கால் வேலை இழந்ததால், சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போனது.

ரேஷன் அரிசி உதவியால், நாள்தோறும், ஒரு வேளை மட்டும் சாப்பிட்டோம்.
இந்நிலையில் எனக்கு, தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் இறந்த உடல்களை, கையாளும் பணி கிடைத்தது.
இந்த வேலையை செய்தால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும், அதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்; ஆனால், பசியிடம் இருந்து தப்பிக்க முடியாது.
காப்பீடு இல்லை
இந்த வேலையால், என் குடும்பத்திற்கு உணவு கிடைக்கிறது என்பதுடன், சகோதரிகளுக்கும், எனக்கும், கல்வி கட்டணம் செலுத்த முடியும்.
தினந்தோறும், இரண்டு அல்லது மூன்று உடல்களை, மற்றொருவர் உதவியுடன், ஆம்புலன்சில் ஏற்றி மயானம் கொண்டு செல்கிறேன். அங்கு, அடுத்தகட்ட பணிகளை செய்கிறேன்.
இதற்கான பாதுகாப்பு உடை, மிக கனமாக இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், தினந்தோறும் வியர்வையில் குளிக்கிறேன். இந்த வேலையில் இருப்போருக்கு, காப்பீடு இல்லை என்பது கவலையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜூன்-202015:57:15 IST Report Abuse
Endrum Indian ஒரு முஸ்லீம் இந்த வேலை செய்வது மிக நல்ல ஒரு மனித நேய பண்பாளன் என்பதை காண்பிக்கின்றது. சந்தோஷத்தை தருகின்றது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூன்-202005:54:07 IST Report Abuse
 Muruga VelAre Muslims exempted from doing this job?...
Rate this:
Cancel
KANTHI - Chennai,இந்தியா
18-ஜூன்-202013:17:42 IST Report Abuse
KANTHI அரசாங்கம் கொறானோ சம்பத்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு, இன்சூரன்ஸ் அல்லது இழப்பீடு தொகை கொடுப்பதற்கு முன் வர வேண்டும்.
Rate this:
Cancel
r.thiyagarajan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202007:26:51 IST Report Abuse
r.thiyagarajan வெரி ரிஸ்கி ஒர்க் அரசு உதவ வேண்டும் இந்த மாணவருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X