அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க., 'மாஜி'க்கள் பதிலடி

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: 'முதல்வர் இ.பி.எஸ்., சொல்லி வரும் பொய்களை வழி மொழிகிறார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

சமீபத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சை புகழ்ந்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:கொரோனா ஊரடங்கு காலத்தில், லட்சக்கணக்கானோர் வேலை இழந்து நிற்கின்றனர்.

ஆனால், இந்த கொரோனா காலத்தில், 47 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகவும், முதல்வர் இ.பி.எஸ்., சொல்லி வரும் பொய்களை, வழிமொழிகிறார் ராஜேந்திர பாலாஜி.ஒரே ஒரு உண்மையை, ராஜேந்திர பாலாஜி ஒப்புக் கொண்டதற்கு நன்றி. 'திரை கடலோடியும் திரவியம் தேடும் உன்னத முதல்வர்' என, சொல்லி இருக்கிறார். உண்மை தான், திரைக்கடலோடியும் திரவியம் தேடுவது மட்டும் தான், முதல்வரின் ஒரே வேலை. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-ஜூன்-202020:27:08 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஊழல் பட்டாளத்தற்கெல்லாம் ராஜேந்திரபாலாஜி பதில் சொல்லத் தேவையில்லை
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
18-ஜூன்-202015:57:01 IST Report Abuse
Baskar பாலாஜியை கண்டால் பேசினால் சும்மா அதிருத்தல்ல தி.மு.க வுக்கு .அந்த பயம் எப்போதும் இருக்கட்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஜூன்-202010:13:09 IST Report Abuse
Girija ராஜேந்திர பாலாஜி போல் ஒரு ஆள் அவசியம் திமுகவை கதறவிட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X