பொது செய்தி

தமிழ்நாடு

நம் ராணுவம் எதையும் சந்திக்கும்: அனுபவம் பகிரும் படை வீரர்கள்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
உயரம் மிகுந்த பனிச் சிகரமான, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா இடையே, போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு தரப்பிலும், ராணுவம் மற்றும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.இரு நாட்களுக்கு முன், இரு தரப்பினர் இடையே கல், முள்கம்பி போன்றவற்றால் தாக்கிக் கொண்டதில், தமிழக வீரர் உட்பட, 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும், 43 பேர் உயிரிழந்தனர்.கொரோனா தொற்று
நம் ராணுவம் எதையும் சந்திக்கும்: அனுபவம் பகிரும் படை வீரர்கள்

உயரம் மிகுந்த பனிச் சிகரமான, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா இடையே, போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு தரப்பிலும், ராணுவம் மற்றும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.இரு நாட்களுக்கு முன், இரு தரப்பினர் இடையே கல், முள்கம்பி போன்றவற்றால் தாக்கிக் கொண்டதில், தமிழக வீரர் உட்பட, 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும், 43 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நேரத்தில், போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய மக்கள் அனைவரும், நம் ராணுவத்துக்கு துணையாக நின்று வருகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட லடாக் பகுதியில், நாட்டை காக்க நிற்கும் ராணுவத்தினர், பல்வேறு சவால்களை
சந்தித்து வருகின்றனர்.


'அன்றும், இன்றும் சீனா குடைச்சல்'இந்திய ராணுவத்தில், சுபேதாராக பணியாற்றி, ஓய்வு பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த சாத்தையா கோபாலகிருஷ்ணன், 77, தன் அனுபவம் குறித்து கூறியதாவது:கடந்த, 1962ம் ஆண்டு, இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். அந்த ஆண்டு சீன போர் வந்து, பங்கேற்றேன். ஒரு கம்பெனியில், 300 - 450 வீரர்கள் வரை இடம்பெற்றிருப்பர். நான் ஒரு கம்பெனி சுபேதாராக வழி நடத்தியுள்ளேன்.தொடர்ந்து, 1965 மற்றும் 1971ம் ஆண்டு போர்களிலும் பங்கேற்று உள்ளேன். ஹிமாச்சல், அருணாச்சல், லடாக் உள்ளிட்ட இடங்களிலும், தலா, ஒரு ஆண்டு பணியாற்றி உள்ளேன்.லடாக் பகுதியில், பனிக் காலத்தில் அதிகளவு பனி கொட்டும்; சாதாரணமாக இருக்க முடியாது. இரவு நேரங்களில், ராணுவ வீரர்கள் தங்க, தகர சீட்டில், 'ஷெட்' அமைக்கப்படும்.அந்த ஷெட்டில் பனிப்பொழிவு விழுந்து கொண்டே இருக்கும். அதை, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அகற்ற, ராணுவ வீரர்களை ஈடுபடுத்த வேண்டும்.

சில நேரங்களில், அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டு, அந்த ஷெட் சரிந்து, வீரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு. அங்கு பணியில் இருக்கும் வீரர்களுக்கு அதிகபட்சம், இரண்டு மணி நேரம் தான் ஓய்வு, துாக்கம் எல்லாம்.அப்போது, தலை முதல், கால் வரை, பனியை தாங்கும், 'ஸ்லீப்பிங் பேக்' அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி, ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.சில நேரங்களில், சரியாக சாப்பாடு கிடைக்காது. பனியால், சாலை வழியாக செல்ல முடியாது. ராணுவ வாகனங்கள் வர முடியாது. அந்த நேரங்களில், ஹெலிகாப்டரில் வீரர்கள் வந்து, பாராசூட்டில் இறங்கி உணவு கொடுப்பர்.

குறிப்பிட்ட துாரத்தில், ஆங்காங்கே மருத்துவ முகாம் மற்றும் மருந்துகள் இருக்கும். இவை அனைத்தும், காலநிலையை பொறுத்து தான், எங்களுக்கு கிடைக்கும்.பொதுவாக ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகள் வழங்கப்படும். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், நாட்டின் எல்லையில் நிற்பதால், ராணுவ வீரருக்கு வேறு எதுவும் நினைக்க தோன்றாது.நம் நாட்டை காப்பது மட்டுமே நினைவில் இருக்கும். மூன்று போர்களை பார்த்து, 28 ஆண்டுகள் பணி செய்து, 1990ல் ஓய்வு பெற்றேன். அப்போதும், இப்போதும் நம் ராணுவம் எதையும் சந்திக்கும் திறன் பெற்றது. சீனா இதேபோன்று தான், எப்போதும், ஏதோ ஒரு வகையில் குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கும். யாரையும் சமாளிக்கும் ஆற்றல், நம் ராணுவத்துக்கு உள்ளது. என் இரண்டாவது மகனை ராணுவத்தில் சேர்த்து, 17 ஆண்டுகள் பணி செய்துள்ளார்.


'மன தைரியம் தான் உயிரை காப்பாற்றும்'இந்திய ராணுவத்தில், விங் கமான்டராக இருக்கும், கோவையைச் சேர்ந்த கணேஷ், 40, கூறியதாவது:லடாக் பகுதியில் பனிக் காலங்களில், மைனஸ், 40 முதல், 48 டிகிரி வரை செல்லும். அப்போது, சாலையே கண்ணுக்கு தெரியாது. இப்போது வெயில் காலம் என்பதால், ஓரளவு காலநிலை சராசரியாக இருக்கும்.குறிப்பிட்ட இடங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு, முன்கூட்டியே மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பர்.மேலும், இந்த பகுதிகளில் வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அவசர நேரத்தில், ஹெலிகாப்டரில் வினியோகம் செய்யப்படும்.பெரும்பாலும், லடாக் போன்ற பகுதியில் இருக்கும் வீரர்களுக்கு, 'டின்' உணவு பொருட்கள் வழங்கப்படும். இந்த டின்னில் அடைத்து வைத்திருக்கும் உணவுப் பொருளை, சுடு தண்ணீரில் போட்டு சாப்பிட வேண்டும்.மற்ற நேரங்களில் அரிசி, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யப்படும். இதற்காக, கெரசின் அடுப்புகள் பயன்படுத்தப்படும். அப்போதைய நேரத்துக்கு என்ன கிடைக்கிறதோ, அதை சாப்பிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட, ராணுவ வீரர்கள் தயார்படுத்தப்பட்டு இருப்பர்.

மற்ற இடங்களை போல், இந்த இடத்தில், மருத்துவ சிகிச்சை என்பது சாதாரணமாக கிடைக்காது.மருத்துவ குழுவினர் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு முயற்சி செய்வர். இயலாத நேரத்தில், ஹெலிகாப்டர் வரவழைத்து, வீரர்களை மீட்க வேண்டும். அதுவரை அந்த வீரரின் மன தைரியம் தான், உயிரை காப்பாற்றி கொண்டு இருக்கும்.பனிப் பொழிவு நேரத்தில், ஹெலிகாப்டரை இயக்குவதும் சுலபமானது இல்லை. ஆக்சிஜன் அளவு குறையும்; ஹெலிகாப்டரில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடையை சுமந்து, அந்த பகுதிகளில் பறக்க முடியாது. இது போன்ற எண்ணற்ற சவால்கள் உள்ளன.
'டெட்டால்' நனைத்த துணியில் துடைப்பது தான் எங்கள் குளியல்'உண்ணவும்,உறங்கவும் முடியாது'லடாக், ஷீபல் பகுதியில் பயிற்சி முடித்து, 22 ஆயிரம் அடி உயரத்தில், 'பீம் டாப்' பகுதியில் பணியாற்றினேன். கஞ்சி, ரசம், ஜூஸ் மட்டுமே உணவு. மைனஸ், 60 டிகிரி குறைவான வெப்பநிலையில் பணியாற்றினேன். குளிப்பது என்பது, 'டெட்டால்' நனைத்த துணியில் துடைப்பது தான். சில பதற்றமான நேரங்களில், உண்ணவும், உறங்கவும் கூட நேரம் இருக்காது. அது போன்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. எனினும், உயிரே போனாலும், நம் வீரர்கள் விடமாட்டார்கள்; வெற்றி பெறுவர்.
சுப்ரமணி - சுபேதார், முன்னாள் ராணுவ வீரர், லடாக், குன்னுார்


'பனியில் விரல்களை இழக்கும் கொடுமை'காஷ்மீர் டிரான்சிட் கேம்ப், லே, லடாக் கேம்ப்களில் சிறப்பு பயிற்சியுடன், 10 பேர் கொண்ட குழுவினர், கிளேசியருக்கு, 1999ல் சென்றோம். அங்கு பாதாம், சாக்லேட், ஜூஸ் போன்றவை மட்டுமே உணவு; வேறு எதுவும் எளிதில் கிடைக்காது. அங்கு நிலவும், கடும் குளிரில், 'சில் பிளேன்' எனும் தோல் நோய் ஏற்பட்டால், விரல்களை துண்டிக்கும் அபாயம் ஏற்படும். கேம்ப்களில் இருக்கும் போது, நான்கு நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து நிமிடங்கள் மட்டும் குடும்பத்தாரிடம் போனில் பேச முடியும். ஒரு நாளைக்கு, 50 பேர் பேசும் வாய்ப்பு இருக்கும். இதற்காக வரிசையில் காத்திருந்து, கிராமத்தில் உள்ள கடைக்காரரின் போனுக்கு கூப்பிட்டு, பெற்றோரை வரச் சொல்வேன். பிறகு மீண்டும், இரண்டாவது முறை வரிசைக்கு சென்று, காத்திருந்து குடும்பத்தாரிடம் பேசினேன். சில நேரங்களில், அந்த லைனும் கிடைக்காது. அப்போது துாக்கம் வராது. எனினும்,
பாதுகாப்பு மட்டுமே எங்களின் குறிக்கோளாக இருக்கும்.சுரேஷ்குமார் - ஹவில்தார்முன்னாள் ராணுவ வீரர், உபதலை, குன்னுார்

லடாக் போன்ற குளிர் பிரதேசங்களில், ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், பெரும்பாலும் நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சென்றவர்களாக உள்ளனர்.லடாக், லே, சியாச்சின் என, பனிமலைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற, நீலகிரியைச் சேர்ந்த, சில முன்னாள் ராணுவ வீரர்களின் அனுபவங்கள்:


'லடாக்கில் பணிபுரிவது மிகவும் சிரமம்'எனக்கு, லடாக்கில், வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகள் பழுது பார்த்து அனுப்பும் ஒர்க் ஷாப்பில் பணி. சீன ராணுவத்தினரும், நாமும், 'ஹலோ' சொல்வோம். அங்குள்ள குளிரான காலநிலையில் பணிபுரிவது என்பது மிகவும் சிரமம். 1962 போருக்கு பின், தற்போது தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சீனாவின் தற்போதைய சூழலில், இது அவசியமற்றது. போரில் லாபம் இல்லை என்பதை உணர்ந்து சீனாவும், நம் அரசும் அமைதி பேச்சில் ஈடுபட வேண்டும். லடாக் பகுதியில் பணிபுரிவது என்பது மிகவும் சிரமம். ஆனால், நாட்டின் பாதுகாப்பு கருதி,
அங்குள்ள அனைத்து வீரர்களும், அரணாக நிற்பர். தாய் மண்ணுக்காக எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வர்.கர்னல் ராமகிருஷ்ண பிள்ளை, லடாக்கில், 1979 - 1981 வரை பணி, குன்னுார்
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
18-ஜூன்-202019:21:43 IST Report Abuse
Anand கட்டுமர கும்பலுக்கு இந்தமாதிரி விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூன்-202009:30:36 IST Report Abuse
RajanRajan மணாலி மௌண்டனேரியன் கேம்ப் ட்ரைன்னிங் என்பது ஒரு மகத்தான ராணுவ பயிற்சி. வாழ்க்கையில் ஒருமுறையாவது அந்த ட்ரைனிங் எடுத்தாக வேண்டும். அத்தனை நேர்த்தியான பயிற்சி முறை. அதுதான் நாம் கார்கில் வெற்றியை ஈட்டி தந்தது. வெட்டி அறிக்கை விடும் துட்டுக்காக போராடும் இன்றைய அரசியல்வாதிகளே நாட்டு பற்றும் தியாகமும் என்னவென்று இன்றாவது புரிந்து வாழ்ந்தால் அது பெரிய விஷயமாகும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூன்-202008:06:58 IST Report Abuse
RajanRajan இந்த லடாக் லே எல்கை ராணுவ பணி பற்றி மக்கள் இந்த பிரசுரத்தை படித்து புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் எல்கைகளை பாதுகாப்பது எத்தனை கடினமான லைப் ரிஸ்க் நிறைந்தது என்பதை குறிப்பாக சில்லறைக்கு அலையும் கடைத்தர அரசியல்வாதிகள் அதிகாரிகள் படித்து திருந்தினால் நன்று. இங்கு இருந்து கொண்டு சொகுசாய் உதார் விடுபவர்கள் ஒருமுறை இந்த லடாக் லே சென்று வாருங்கள் அதுவும் குளிர்காலத்தில். நம் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஜவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X