எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

மீண்டும் 1962- திரும்புமா: கல்வானில் என்ன பிரச்னை?

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மீண்டும் 1962- திரும்புமா: கல்வான், என்ன பிரச்னை?

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை, நீண்ட காலமாக இருந்து வருகிறது. இருப்பினும், எல்லையில் உள்ள, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, பிரச்னையை தீவிரமாக்கியுள்ளது.

கடந்த, 1962ல் இந்தியா - சீனா இடையேயான போர், இதே கல்வான் பகுதியில் இருந்து தான் துவங்கியது. தற்போது, அந்தப் பகுதியில் பிரச்னை தீவிரமடைந்துள்ளதால், மீண்டும், 1962ல் நடந்தது போன்று போர் ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.'கொரோனா' தொற்று பரவல், பொருளாதார பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும் போது, தற்போது எல்லைப் பிரச்னையை சீனா கையில் எடுத்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய நடவடிக்கைகள் வெறும் மிரட்டலா, கொரோனாவைப் பரப்பிய நாடு என்ற அவப் பெயரை, மக்கள் மனதிலிருந்து நீக்க, சீன அதிபர் ஸீ ஜின்பிங் எடுத்துள்ள ஆயுதமா என, பல கோணங்களில் இந்தப் பிரச்னை விவாதிக்கப்படுகிறது.


பல உதாரணங்கள்அதற்கு முன், இந்தியா - சீனா இடையே என்ன தான் பிரச்னை என்பதையும் பார்க்க வேண்டும்.இந்தியா - சீனா, 3,488 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், எல்லையை நாம் வரையறுத்துள்ளோம். அதனால் தான், பாகிஸ்தானுடன் ஐ.பி., எனப்படும் சர்வதேச எல்லை மற்றும் எல்.ஓ.சி., எனப்படும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், சீனாவுடனான எல்லை வரையறுக்கப்படவில்லை. பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில், பரஸ்பரம் சில பகுதிகளை இந்தியா விட்டுக் கொடுத்துள்ளது. சிலவற்றை கையில் வைத்துள்ளது.

அதனால் தான், இரண்டடி முன் வைத்தால், ஒரு அடி பின்வாங்குவது என்ற கொள்கையின்படி, எப்போதும் ஒவ்வொரு அடியாக, அண்டை நாடுகளை சீனா கைப்பற்றி வந்துள்ளது. திபெத் உட்பட இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.நம் நாடு சுதந்திரம் அடைந்து, குடியரசு அந்தஸ்து பெற்றதில் இருந்து, சீனாவையே முழுமையாக நம்பியிருந்தோம். ஒரு கட்டத்தில் சீனாவை சந்தேகக் கண்ணோடு பார்த்தாலும், சீனா நம்மோடு மோதுமே தவிர, போரில் ஈடுபடாது என்பதே, நம்முடைய முந்தைய ஆட்சியாளர்களின் எண்ணங்களாக இருந்தது. இது, 1962ம் ஆண்டு நடந்த போர் வரை.
முக்கியமான பகுதிதன் ஆக்கிரமிப்பு கொள்கையை, திறம்பட சீனா செயல்படுத்தி வந்துள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த, அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இந்தியா - சீனா இடையேயான, எல்.ஏ.சி., எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே இது அமைந்துள்ளது. அதேபோல் எல்லைக்கு மிக அருகில் உள்ள, லடாக்கின் கல்வான் பகுதி, இத்தனை ஆண்டுகளாக நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளது.லே பகுதியைச் சேர்ந்த சுற்றுலா நிபுணரான, குலாம் ரசூல் கல்வான், இந்த நதி இருப்பதை கண்டுபிடித்தார். அதனால், அதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. இந்த நதி, அக்சாய் சின்னுக்கு மேற்கே அமைந்துள்ளது. அக்சாய் சின்னில் இருந்து உருவாகிறது. கடந்த, 1960ல் இந்த நதியை ஒட்டியுள்ள பகுதியை தன் எல்லையாக சீனா கூறி வந்தது. கடந்த, 1962ல் நடந்த போரில் அதை கைப்பற்றியது.

அதன் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதி ஏற்பட்டது. கடந்த, 1960ல் இந்த நதியை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதியை, உண்மையான கட்டுப்பாட்டு பகுதியாகக் கருத, இரு நாடுகளும் முடிவு செய்தன. ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு வரைபட பகிர்வும் நடக்கவில்லை. அதன்படி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள், நம்முடைய எல்லைக்குள் வந்தன.
கோடைக் காலத்தில் இந்த பகுதிக்கு யாரும் செல்ல மாட்டார்கள். குளிர்காலத்தில் மட்டும், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக செல்வர். மற்றபடி, பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை என்றே கூறலாம்.தற்போது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி திடீரென முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம் உள்ளது.

கடந்த, 1962ல் நடந்த போருக்குப் பின், சீனாவுடன் உறவு இருந்தாலும், எப்போதும் சந்தேகத்துடனே அதை பார்த்து வருகிறோம். எந்த நேரத்தில் என்ன செய்யும் என்ற அச்சம் உள்ளது. தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சாலை வேய்வது உள்ளிட்ட வசதிகளை சீனா செய்து வந்தது. ஆனால், நம்முடைய அரசுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தன.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் துவங்கின. எல்லைப் பகுதி வரை செல்வதற்கு சாலைகள் அமைப்பது, பாலங்கள் அமைப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டன. லடாக்கில் இதுபோன்ற பணிகள் நடந்தன.


அரசின் நோக்கம்மற்றொரு அண்டை நாடான நேபாளமும் தற்போது போர்க் கொடி துாக்கியுள்ளதற்கு, இந்த வளர்ச்சிப் பணிகளே காரணம்.ஏதாவது போர் சூழல் ஏற்பட்டால், மிக விரைவில், நம் படைகள் எல்லைக்கு செல்ல முடியும். இதுவே, சீனாவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்ததில் இருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று கூறி வருகிறது. அதேபோல், சீனா ஆக்கிரமித்துள்ள, அக்சாய் சின் பகுதியை மீட்பதும், இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.தற்போது எல்லை வரை சாலைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருவதால், அக்சாய் சின் பகுதியை மீட்பது இந்தியாவுக்கு சாதகமாகி விடும் என்பதே, சீனாவுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கில், 10க்கும் மேற்பட்ட பகுதிகளில், எல்லை தொடர்பாக பிரச்னை உள்ளது. ஆனால், கல்வான் பகுதியை சீனா தேர்ந்தெடுத்தது, இதுவே காரணம்.


மறக்க முடியுமாதற்போது, கல்வான் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 1962ல், இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டபோதும், கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலே காரணமாக அமைந்தது.அப்போது, 350க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர், கல்வான் பகுதியில் நம் ராணுவத்தை சுற்றி வளைத்தனர். அப்போது, நான்கு மாதங்களுக்கு மேலாக, இரு தரப்பும் பல பேச்சுகளை நடத்தின; அறிக்கைகளை வெளியிட்டன.

அப்போது பிரதமராக இருந்த, ஜவஹர்லால் நேரு மற்றும் ராணுவ அமைச்சர், வி.கே.கிருஷ்ண மேனன், சீனா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். 'இப்படித்தான் மிரட்டுவர்; ஆனால் போருக்கு எல்லாம் வரமாட்டார்கள்' என, நினைத்தனர். அதனால், எல்லைக்கு பெரிய படையை அனுப்பவில்லை. ஆனால், சீனா போரில் இறங்கியது. அதை ஜவஹர்லால் நேரு எதிர்பார்க்கவில்லை; அப்போரில் நாம் தோற்றோம்.ஜவஹர்லால் நேருவைப் போல, அவருக்கு அடுத்த வந்த காங்., பிரதமர்களும், சீனா மீது மென்மையான போக்கையே கடைப்பிடித்து வந்தனர். கடந்த, 1975 வரை, சீனா, சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தது. அக்சாய் சின் பகுதியை விட்டு நீங்கவே இல்லை. கடந்த, ௧௯௭௫ல் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில், சில உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன.அதன் பிறகு, பெரிய அளவில் எல்லைப் பிரச்னையை, இரு நாடுகளும் கையில் எடுக்கவில்லை.இப்போது இந்திய தரப்பில் சாலை அமைப்பதே, சீனாவை அத்துமீறச் செய்யத் துாண்டுகிறது. எனினும், இனியும் நிராயுதபாணியாக நாம் இருக்கக் கூடாது என்பதிலும், நம் உரிமைகளை எந்த நாட்டிடமும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி, ௧௯௬௨ல் ஏற்பட்ட நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
வாய்ச் சண்டைசமீப காலமாக சீனாவின் நடவடிக்கைகளை உற்று கவனித்து வரும் நம் ராணுவம், அதற்கேற்றாற்போல், தன்னைத் தயார்படுத்தி வைக்கத் துவங்கி விட்டது.
சீனா, ஒரு ஹெலிகாப்டரை கொண்டு வந்தால், உடனே, நம் தரப்பிலிருந்தும் ஒரு ஹெலிகாப்டர், எல்லைக்கு பறந்துவிடும்.வாய்ச் சண்டை எனத் துவங்கி, கற்களை வீசித் தாக்கி, வீரர்களின் உயிரைப் போக்கும் அளவுக்கு வெறி கொள்ள ஆரம்பித்துள்ளது சீனா. 'இந்த மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு பயப்பட்டது ஒரு காலம். தற்போது, அந்த பாச்சா எல்லாம் பலிக்காது' என்பதை, நம் வீரர்களும் நிரூபித்துள்ளனர்.சீனா தற்போது அதைப் புரிந்து கொண்டுள்ளது போல், பேச்சு நடத்த திடீரென முன் வந்துள்ளது. சீனாவின் எண்ணம் என்ன என்பது, இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்!- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
18-ஜூன்-202015:04:39 IST Report Abuse
Murthy எல்லையில் சாலை போட ஆரம்பித்தது 2005-ல், மன்மோஹன்சிங் ஆட்சியில்.
Rate this:
visu - Pondicherry,இந்தியா
19-ஜூன்-202007:47:44 IST Report Abuse
visucongress adivarudi...
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
18-ஜூன்-202015:02:38 IST Report Abuse
Murthy இந்தியாவின் டிரம்ப் என அழைக்கப்படும் மோடிக்கும் உதவி செய்துள்ளதுபோல் உள்ளது. இருபதுக்கும் மேலான ராணுவவீரர்கள் இறந்தும், சீனாவை கண்டிக்காமல் இருக்கிறார் மோடி மற்றும் ஆளும் அரசின் மந்திரிகள்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
19-ஜூன்-202010:07:18 IST Report Abuse
sankarivar solli evarum ketkapovathu illai -...
Rate this:
Cancel
Ayappan - chennai,இந்தியா
18-ஜூன்-202009:14:09 IST Report Abuse
Ayappan China???? Now they are in trouble Jai hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X