பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாங்க எல்லை மீறல் 'கவனித்து' அனுப்பிய போலீஸ்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; மது பாட்டில்கள் வாங்குவதற்காக, எல்லையை கடந்து செல்லும் சென்னைவாசிகளை, போலீசார், 'கவனித்து' அனுப்பினர்.

கொரோனா பாதிப்பால், சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நாளை முதல், 30ம் தேதி வரை, ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

இதனால், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. வடசென்னையில் வசிப்பவர்கள், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம், அருமந்தை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில், மது பாட்டில்கள் வாங்கி வந்தனர்.மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் வசிப்பவர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வாங்கினர்.ஊரடங்கு அமலுக்கு வருவதால், தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை முன்கூட்டியே வாங்குவதற்காக, நேற்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, சென்னைவாசிகள், இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் படையெடுத்தனர்.

இதனால், மதுக்கடைகளில் அதிகளவில் கூட்டம் அலைமோதியது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை கடந்து சென்றவர்களை மட்டும், வானகரம், நல்லுார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் மடக்கி பிடித்த போலீசார், அபராதம் வசூலித்து திருப்பி அனுப்பினர்.அவசர வேலை எனக்கூறி வாக்குவாதம் செய்தவர்களை, போலீசார், 'கவனித்து' அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X