பொது செய்தி

தமிழ்நாடு

மேலே ஷோ ரூம்' கீழே 'மியூசியம்' அசத்தும் சர்வோதய சங்கம்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
 மேலே ஷோ ரூம்' கீழே 'மியூசியம்'  அசத்தும் சர்வோதய சங்கம்

அருப்புக்கோட்டை: தரமான கதர் வேட்டிகள், பட்டு வேட்டி மற்றும் வாசனை பொருட்கள், இயற்கை மருத்துவ பொருட்கள் என்றாலே நினைவுக்கு வருவது சர்வோதய சங்கம் தான்.

அருப்புக்கோட்டையில் சர்வோதய சங்கம் துவங்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் தனியார் நிறுவனங்களை மிஞ்சும் வகையில் ேஷா ரூம் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல்குடி ரோடு ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி எதிரே தனி கட்டடத்தில் செயல்படும் இங்கு மேல் தளத்தில் மர பர்னிச்சர்கள், வாசனை பொருட்கள், மூலிகை பொருட்கள், தேன் போன்ற இயற்கை பொருட்கள் விற்பனைக்கு காட்சி படுத்தப்பட்டுள்ளன.

கீழ் தளத்தில் மகாத்மா காந்தியின் வரலாற்று புகைப்படங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. காந்தி சந்தித்த முக்கிய தலைவர்கள், வரலாற்று நிகழ்வுகள், சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகள் என அரிய வகை புகைபடங்கள் உள்ளன. குடும்பத்துடன் வருபவர்கள் குழந்தைகளுடன் மியூசியத்தில் பயனுள்ள தகவல்களை ஆச்சிரியத்துடன் பார்க்கின்றனர். பள்ளி மாணவர்களும் 'விசிட்' அடிக்கின்றனர். அருப்புக்கோட்டை மக்களுக்கு மேலே பர்சேஸ், கீழே மியூசியம் என்பது புதுமையாக உள்ளதால் பொழுது போக்கிற்காக குழந்தைகளுடன் வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X