அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு பயிற்சி: முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை,; பிளஸ் 2 மாணவர்கள், 'நீட்' நுழைவு தேர்வுக்கு தயாராவதற்கான இணையதள பயிற்சி வகுப்பை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.

மருத்துவ படிப்பில், மாணவர் சேர்க்கைகான, 'நீட்' தேர்வை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எழுதுவதற்கு வசதியாக, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, 2017ல் முதல்வர் துவக்கி வைத்தார்.

ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம், 412 மையங்களில், பயிற்சி வகுப்புகள் நடந்தன. இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' போட்டி தேர்வுக்கு, இணையதளம் வழியே பயிற்சி அளிக்க, 'ஆம்பிசாப்ட் டெக்னாலஜிஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன், பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.இப்பயிற்சி பெற, இதுவரை, 7,420 மாணவர்கள், பதிவு செய்துள்ளனர். இந்த இணையதளம் வழியே, ஒவ்வொரு நாளும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு, தலா, ஒரு மணி நேரம் வீதம், நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.

அன்றைய தினமே, ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு மணி நேரம் வீதம், நான்கு மணி நேரம், பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.இந்த இணையதள பயிற்சி வகுப்பை, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X