தமிழ்நாடு

அஜாக்கிரதை எங்குமே காணோம் மாஸ்க்,கை கழுவும் ஏற்பாடுகள் :தளர்வை முறையாக பேணாத வியாபாரிகள் , மக்கள்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் கடைகள் உள்ளிட்ட வியாபார ஸ்தலங்களில் மாஸ்க் அணிதல், கை கழுவும் ஏற்பாடுகள் என எதையுமே முறையாக கடைப்பிடிக்காததால் அரசு தளர்வு வழங்கியும் விதிகளை மீறுவதால் அப்பாவி மக்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகும் நிலை தொடர்கிறது.

மாவட்டத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது அனைத்து கடைகளும் செயல்பாட்டில் உள்ளன. மக்கள் பாதுகாப்பான முறைகளை பின்பற்றி தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியே அரசும் தளர்வுகளை அறிவித்தது. தளர்வுகளின் துவக்கத்தில் முழு கண்காணிப்பில் இருந்த போலீசார் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் தற்போது கண்காணிப்பு செய்வதே இல்லை.

இதனால் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வியாபார ஸ்தலங்களில் மாஸ்க் அணிதல் கை கழுவும் ஏற்பாடுகளே இல்லை. அப்படியே இருந்தாலும் பெயரளவிலே காட்சி பொருளாகதான் உள்ளது. கை கழுவ கூட அறிவுறுத்துவதும் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய விற்பனையாளர்களும் மாஸ்க் அணிவதில்லை. சமூக இடைவெளி என்பதே இல்லாததால் அதை பின்பற்ற நினைப்போரும் தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர். இதுவே தொற்று எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகிறது.

இதை கட்டுப்படுத்த துறை அதிகாரிகளை களப்பணியில் முடுக்கவிட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

அலட்சியம் வேண்டாமே

மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவது மட்டுமே பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரே வழி என அரசு அழுத்த திருத்தமாக கூறிவிட்டது. ஆனால் பொதுமக்கள் பலர் கொரோனா பயம் இன்றி விதிகளை மீறுகின்றனர். மாஸ்க் கூட அணிவதில்லை.

இது போல் கடைகளிலும் கை கழுவும் ஏற்பாடுகளும் முறையாக இல்லை.இதை கட்டுப்படுத்த இங்கு திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அலட்சியம் செய்தோம் வரும் நாட்களில் பாதிக்கபோவது நாம் தான் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

சரவணன், நகைக்கடை உரிமையாளர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X