பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு முதல்வரின் தனி செயலர் பலி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; முதல்வரின் தனி செயலர், கொரோனாவால் இறந்தது, முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் தலைமை செயலக ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர்கள் பீதிசென்னையில், கொரோனா நோய் பரவல், அதிக அளவில் உள்ளது. கொரோனாவால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைமை செயலகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், தலைமை செயலக ஊழியர்கள் இடையே, பீதி ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு அலுவலகங்களில், 33 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என, தலைமை செயலக சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.கடும் அதிர்ச்சிசென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கை, அரசு அறிவித்துள்ளது. இந்நாளில், 33 சதவீத பணியாளர்கள் மட்டும், அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில், முதல்வர் அலுவலகத்தில், முதல்வரின் தனி செயலராகப் பணிபுரிந்த தாமோதரன், 55, என்பவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 12ம் தேதி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; நேற்று முன்தினம் இரவு இறந்தார்.அவரது இறப்பு, முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் தலைமை செயலக ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க உத்தரவுமுதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் அலுவலக பிரிவில், முதுநிலை தனிச் செயலராக பணியாற்றி வந்த தாமோதரன், உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை, அவர் இறந்த செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன்.கொரோனா தடுப்பு பணியின் போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய, தாமோதரனின் சேவை மகத்தானது. அவரது குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதி அடிப்படையில், அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X