பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகள் மேம்பாட்டுக்கு பணிபுரிவோர் விருது பெற வாய்ப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை,; மாற்று திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிவோருக்கு வழங்கப்படும், விருதுகளை பெற, வரும், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாற்று திறனாளிகள் நலனுக்காக, அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டருக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் மாற்று திறனாளிகளுக்கு, சேவை புரிந்த, சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் மாற்று திறனாளிகளுக்கு, சேவை பரிந்த சிறந்த மருத்துவர்; சமூகப் பணியாளர்; மாற்று திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் கலெக்டருக்கான விருது, மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டிலும், மற்ற விருதுகள் சுதந்திர தின விழாவிலும் வழங்கப்படும். விருதுக்கான விண்ணப்ப படிவத்தை, மாற்று திறனாளிகள் நல ஆணையரகத்தில் அல்லது மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 27ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ, தபால் வழியாகவோ, சமர் ப்பிக்க வேண்டும். விருதாளர்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்வர் என, அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X