பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு டோக்கன்கள் கபளீகரம் புரோக்கர்களால் மக்கள் பெரும் அவதி

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பத்திர பதிவுக்கான டோக்கன்களை, தரகர்கள் மொத்தமாக, 'பிளாக்' செய்வதால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், பதிவுத்துறை வருவாயும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பத்திர தகவல்களை ஆன்லைன் வாயிலாக உள்ளீடு செய்து, பதிவுக்கான நேரத்தை முன்பதிவு செய்ய, டோக்கன் பெற வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, சார் பதிவாளர் அலுவலகங்களில் தினமும், 50 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், பம்மல் உள்ளிட்ட பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில், சில நாட்களாக பொது மக்கள் டோக்கன் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.ஒவ்வொரு நாளும், அனைத்து டோக்கன்களும் முன்கூட்டியே பெறப்பட்டு உள்ளன. ஆனால், அந்த நாட்களில், 10 அல்லது, 15 பத்திரங்கள் மட்டுமே, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து, அம்பத்துாரை சேர்ந்த வழக்கறிஞர், எம்.சம்பத் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் சார் பதிவாளர் அலுவலகத் தில், ஒரு பத்திரப் பதிவுக்காக டோக்கன் பெற முயற்சித்தேன். ஒரு வாரமாக முயன்றும், டோக்கன் பெற முடியவில்லை.குறிப்பிட்ட நாட்களில், அதிக பத்திரங்களும் பதிவாகாததால் சந்தேகம் எழுந்தது. நேரில் விசாரித்த போது, சிலர் மொத்தமாக டோக்கன்களை, 'பிளாக்' செய்வது தெரியவந்தது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால், நமது பத்திரம் பதிவுக்கு செல்லும்; மறுத்தால் வேலை நடக்காது.

இதுகுறித்து, பதிவுத்துறை ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். வெளிப்படை தன்மைக்காக கொண்டு வரப்பட்ட வழிமுறையை, புரோக்கர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி சம்பாதிப்பதை தடுக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சார் பதிவாளர் அலுவலகங்களில், தினமும் பெறப்படும் டோக்கன்கள், அதில் பயன்படுத்தப்பட்டவை, பத்திரப்பதிவு எண்ணிக்கை குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன. புகார் வந்துள்ள சார் பதிவாளர் அலுவலக செயல்பாடுகளை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை அளித்து, டோக்கன் பெறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X