செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்

Added : ஜூன் 17, 2020
Share

வீரர்களுக்கு பா.ஜ., அஞ்சலி

அருப்புக்கோட்டை: வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அருப்புக்கோட்டை அண்ணா சிலை அருகில் பா.ஜ., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர தலைவர் காளிமுத்துக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுகுழு உறுப்பினர் ராஜேஸ்வரி, மாவட்ட செயலர் ஜெயராஜ், துணைத் தலைவர் அழகர்சாமி, சட்டசபை பொறுப்பாளர் சத்யபாலன் கலந்து கொண்டனர்.

எடியூரப்பாவிற்கு கடிதம்

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு பிராமணர் சங்க ஸ்ரீவில்லிபுத்துார் கிளை தலைவர் முத்துபட்டர்
கர்நாடகா முதல்வர் எடியூராப்பாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில்
அந்தணர்களுக்கு தனிவாரியம் அமைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த
தங்களை அந்தணர் சமுதாயமே பெருமைகொள்கிறது. இதற்காக நன்றியை தெரிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது பொதுப்பிரிவினர், 18 வயது முதல் 45 வயது சிறப்பு பிரிவு வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபார, தொழில்களுக்கு ரூ.5 லட்சம், உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். விரும்புவோர் www.msme.online.tn.gov.in/uyegpல் விண்ணப்பிக்கலாம். வளாக மாவட்ட தொழில் மைய மேலாளரையும் அணுகலாம், என குறிப்பிட்டுள்ளார்.

வீடு தேடி வருது கூலி

விருதுநகர்: கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நுாறு நாள் வேலை தொழிலாளர்கள் வங்கி சென்று ஊதியம் பெறுவதை தவிர்க்கும் வகையில் அடுத்த 3 மாதங்களுக்கான (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) கூலித்தொகையை அவரவர் வீடுகளுக்கு வங்கி தொடர்பாளர்கள் மூலமாக நேரில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என
குறிப்பிட்டுள்ளார்.

மலை செல்ல மலைவாழ் மக்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி வனப்பகுதியில் மாடுகள் மேய்ச்சலுக்கு தடை விதித்ததால்
வாழ்வாதாரம் பாதிப்பதாக மலைவாழ் மக்கள் புகார் கூற வத்திராயிருப்பு தாலுகா
அலுவலகத்தில் சப்கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் முகமது ஷாபாப், தாசில்தார்கள் ராம்தாஸ், கிருஷ்ணவேணி
பங்கேற்றனர். மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் உணவுப்பொருட்கள் சேகரிக்க
அனுமதிக்கபடுவார்கள் . மாடுகள் மேய்ச்சலுக்கு தாணிப்பாறை மலையடிவாரப்பகுதியில் நிலம் ஒதுக்கி தண்ணீர் தொட்டி அமைத்து தர முடிவு செய்யபட்டது.

குளத்தினை மூடாமல் துார்வாருங்க

சிவகாசி: சிவகாசி சித்து ராஜ புரம் ஊராட்சி மேலுாரில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறைக்குளம் உள்ளது. இப்பகுதியிலுள்ள 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும் பொதுமக்கள் துணி துவைக்க, குளிக்க பயன்படுத்தி வந்திருந்தனர். ஆனால் தற்சமயம் குளம், கோரைப்புற்கள், கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனை மூடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த குளத்தினை மூடாமல், அதனை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறுதானிய பயிருக்கு ரூ.68.49 லட்சம்

விருதுநகர்: கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: சிறுதானியங்களை சாப்பிடுவது மூலம் உடலில் ஊட்டசத்து அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறுதானிய பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.மாவட்டத்தில் 41,100 எக்டேரில் சோளம் , கம்பு ,
மக்காச்சோளம் , குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் சாகுபடியை அதிரிக்க ரூ.68.49 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மானிய திட்டங்களை பெற அந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7,500 நிவாரண நிதி வழங்க கோரி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் முருகன் தலைமை
வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டி, சி.ஐ.டி.யூ., தலைவர் பாண்டி பேசினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்ட்டது. ஒன்றிய செயலாளர்கள் முத்துவேலு, ராஜா, முத்துமாரி, சுடலை பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X