கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க

Added : ஜூன் 17, 2020 | |
Advertisement
வாழ்வில் அனைவருக்கும் முக்கிய நிகழ்வு யாதெனில்… அது அவரவரின் திருமணம். திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். அது போலவே பெற்றோர்களுக்கும் பெற்றெடுத்த கண்மணிகளின் திருமணம் குறித்து பலவிதமான கனவுகள் எண்ணங்களில் நிறைந்து இருக்கும். நாச்சியார் திருமொழியில் கூட ஆண்டாள் தன் திருமணம் குறித்து இப்படி கனவு காண்கிறார். 'மத்தளம் கொட்ட வரிசங்கம்
 கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க


வாழ்வில் அனைவருக்கும்
முக்கிய நிகழ்வு யாதெனில்…
அது அவரவரின் திருமணம்.
திருமணம் குறித்து ஒவ்வொரு
வருக்கும் ஆயிரம் கனவுகள்
இருக்கும். அது போலவே பெற்றோர்களுக்கும் பெற்றெடுத்த கண்மணிகளின் திருமணம் குறித்து பலவிதமான கனவுகள் எண்ணங்களில் நிறைந்து இருக்கும்.
நாச்சியார் திருமொழியில் கூட ஆண்டாள் தன் திருமணம் குறித்து இப்படி கனவு காண்கிறார்.
'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுாத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து
என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்
தோழீநான்' மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க, வரிகளையுடைய சங்குகளை நின்று ஊத, அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்ற தன் கனவை சொல்கிறார்.


ஆயிரம் திருமண பத்திரிகைகள்ஆயிரம் திருமண பத்திரிகைகளை சேமித்து வைத்து ஓடும் ஆற்று நீரில் விட்டு கை தொழுதால் பெரும் புண்ணியம் வாய்க்கும் என்று ஆன்மிக பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு செய்யும் போது நம் வீட்டில் பிள்ளைகளின் திருமண தோஷங்கள் ஏதேனும் இருந்தால் கூட விலகி விடுமாம். இதைக் கேட்டு 1000 பத்திரிகைகளை பயபக்தியுடன் சேமிக்கத் துவங்கியிருந்த என் தோழி, சமீபத்தில் அலைபேசியில் பேசினார். கொரோனா காலத்தில் திருமண பத்திரிகைகள் ஏதும் வரப்பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார். ஊரடங்கு காலத்தில் எந்த பத்திரிகையும் வாசல் தேடி வரவில்லை.
ஏப்ரல், மேயில் நடைபெறவிருந்த சில திருமணங்கள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனாலும் சில இடங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நடத்தியே தீர வேண்டும் என்னும் நோக்கில் சீரான சமூக இடைவெளி கடைபிடித்து நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்ற திருமணங்கள் நடைபெற்றன. அது இணையம் வாரியாக நேரலை யாகவும் பதிந்தும் பலருக்கு பகிரப்பட்டது. இது கொரோனா ஏற்படுத்திய காலத்தின் கோலம் என்று எடுத்துக் கொண்டாலும் உள்ளபடியே திருமணத்துக்குச் சென்று மாங்கல்ய தாரணம் நிகழ்கையில் கெட்டி மேளம் கொட்ட மணமக்களை மஞ்சள் அரிசி, பூ துாவி வாழ்த்துவது மிக ரசனை

யானது. அதில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும்.


நம் மரபுமணமக்களுக்கு ஒரே நேரத்தில் பலரின் ஏகோபித்த வாழ்த்துதல் கிடைக்கப் பெற்று அவர்கள் புது வாழ்வை துவங்க வேண்டும் என்ற நோக்கிலேயே உறவினரை அழைத்து திருமணம் நிகழ்த்துவது நம் மரபு. சாஸ்திர சம்பிரதாயங்களின்படி இத்தனை மக்களின் முன் நாம் இல்லறத்துக்குள் இணைந்து நுழைந்திருக்கிறோம். 'நம் பந்தம் உறுதியானது' என்ற எண்ணம் அவர்களுக்குள் வலிமையாக விதைக்கப்படும் திருநாளாகவும் திருமண நிகழ்வுகள் காலந்தோறும் இருந்து வருகின்றன. 'லிவிங் டுகேதர்' என்ற முறையில் வாழ்பவர்களுக்கு சின்ன கருத்து வேறுபாடுகளுக்கெல்லாம் எவ்வாறு நாம் இணைந்தோமோ அவ்வாறே பிரிந்து விடலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது. இணைதல் என்பது சுலபமானதாக இருப்பதால் பிரிதலும் சுலப
மானதாக இருப்பதாக அவர்களின் மனம் ஏற்றுக் கொள்கிறது. மாறாக ஊர்கூடி திருமண பந்தத்துக்குள் இணைபவர்கள், ஆயிரம் சச்சரவுகளை கடந்தாலும் நாம் இணைந்திருக்க வேண்டும் என்ற வலிமையான உணர்வுடன் இருக்க முடியும்.


கொரோனா கொடுமைகள்என் தோழியின் தங்கை திருமணமானது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட தேதியின் படி இந்த கொரோனா காலத்தில் சிக்கிக் கொண்டது. தோழியின் அப்பா தன் இரு மகள்களுக்கு கண்ணுக்கு நிறைவாய் திருமணம் நிகழ்த்திவிட்டு தன் இளைய மகளுக்கு வெறுமனே 40 பேர் கொண்ட நிகழ்வாக திருமணம் நடத்த மனமில்லை என்று முதலில் வருந்தினார். பின் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏற்கனவே முதல்முறை அவரவர் நாள் நட்சத்திரத்திற்கேற்ப திருமண தேதி குறித்ததே குதிரைக்கொம்பாக இருந்தது. மீண்டும் மற்றொரு திருமண தேதியை குறித்து அனைத்தையும் மாற்றியமைப்பது என்பது சவாலாக அமையும். அத்துடன் மணமக்கள் ஒருவரோடு ஒருவர் மணிக்கணக்கில் பேசி வருகிறார்கள். எப்போது திருமண தேதி நெருங்கும், எப்போது தங்கள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும் என காத்துக் கிடக்கிறார்கள். அவர்களை இதன்பிறகும் பிரிப்பது கொடுமை என்ற நல்லெண்ணத்தில் முதலில் குறிக்கப்பட்ட தேதியிலேயே திருமணம் நடத்திவிடுவது என்று முடிவெடுத்தனர்.
இந்த கொரோனா காலத்து கொடுமைகள் எப்போது தீரும் என்று சொல்ல முடியாத நிலையில் அந்த தேதியிலேயே திருமணம் நடத்திவிடுவது என்ற முடிவெடுத்தது சிறந்ததும் கூட.


வருவாய் இழப்புஊரடங்கு காலத்தில் நடைபெற்ற திருமணங்களில் ஆறுதலடைந்த விஷயம் என்னவெனில் உணவு பொருட்கள் எதுவும் பெரிதாக வீணாகி இராது. அளவான மக்களுக்கு, அளவான உணவு பரிமாறுதல் என திருப்தியாக இருந்திருக்கும். திருமணத்தின் வாயிலாக எத்தனையோ மக்கள் பலவிதமான பணிகள் மூலமாக வருவாய் பெற்று வந்தார்கள். அவர்களின் வருவாய் இழப்புக்கும் இந்த கொரோனா காரணமாக அமைந்துவிட்டது. கொரோனாவுக்கு முன் திருமணத்துக்கு வருபவர்கள், மணமக்களுக்கு பரிசு கொடுக்க நீண்ட வரிசையில் நின்றார்கள். அந்த வரிசை வெறிச்சோடி விட்டது, ஏனென்றால் வெளியாட்களை அழைக்க முடியவில்லையே.
1970களுக்கு முன்பெல்லாம் மணப்பெண்கள் குனிந்த தலை நிமிரமாட்டார்கள். 80 களில் மணமேடைகளில் சற்றே முகம் நிமிர்த்தி அமர்ந்தார்கள்.

90 களில் மெல்ல தன் முகம் மலர்த்தி சிரித்தார்கள். 2000 ல் வாழ்த்த வருபவர்களுக்கு சிரித்தபடியே அழகாய் பதிலளிக்க துவங்கினார்கள். சென்ற வருடத்தில் சில மணமகள்கள் மணமேடைக்கு புல்லட்களில் பறந்து வந்தார்கள். ஒய்யார மாய் நடனமாடியபடியும் குத்துபாட்டுக்கு கும்மியடித்தபடியும் விதவிதமாய் மணமேடை நோக்கி வந்தார்கள். திருமண நிகழ்வில் கூட மணமேடையில் அமர்ந்தபடி மணமக்கள் 'டிக் டாக்'செய்தார்கள். கொரோனா காலத்துக்கு பிறகு மணப்பெண்கள் மணமேடைக்கு முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். காலம் ஏற்படுத்திய கொடுமையை என்ன சொல்வது!


மகிழ்ச்சி தருணங்கள்மணமக்களைச் சுற்றி வெடிச் சிரிப்பும் மகிழ்ச்சியும் பரவிய தருணங்கள் எப்போது திரும்ப வாய்க்கும் என ஏக்கத்துடன் காத்திருக்கிறது காலம். மங்கல வேளையில் உறவுகள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, வாழ்த்தி, மகிழ்ந்த நடைமுறைகள் என்று திரும்பும் என்பதே எதிர்பார்ப்பாய் உள்ளது. எது எப்படியோ கொரோனா காலத்தில் திருமணம் எப்படி நிகழ்ந்தாலும் இருவருக்குமிடையேயான மனப்பொருத்தம் சிறப்பாய் அமைந்து விட்டால் போதும். அதுவே இன்றைய அவசியம். அப்படி நிகழ்த்தினால் 'பூ முடிப்பாள் என் பூங்குழலிதேன் வடிப்பாள் வண்ணத் தேனருவி' பாடலில் இடம்பெறும் 'கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க' என்ற வரிகளுக்கு இன்றைய கால திருமணத்திலும் உயிர்ப்பு கூட்டலாம்.-பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர்ஆரணி. 94430 06882

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X