பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் காப்பீட்டில் சிகிச்சை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; 'முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு, பெரும்பாலோர் சிகிச்சை பெறலாம்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், விருப்பப்பட்டால், தனியார் மருத்துவமனைகளில், சொந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையில், தனியார் மருத்துவமனைகளில், சொந்த செலவில் சிகிச்சை பெறலாம் என்பதை ரத்து செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. நேரடியாக அனுமதிக்கலாம்தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையை, நாளைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் சார்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில், 44 அரசு பரிசோதனை கூடங்கள்; 33 தனியார் பரிசோதனை கூடங்களில், கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும், முழு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு, வைரஸ் தொற்று தீவிரம் என்றால், அரசு பட்டியலிட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் நேரடியாக அனுமதிக்கலாம்.

தீவிர சிகிச்சை தேவைப்படாதவர்கள் என்றால், அவர்களை, தனியார் மருத்துவமனைக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அனுப்ப முடியும்.1.58 கோடி குடும்பங்கள்தனியார் மருத்துவமனைகளில், குறைந்தபட்சம், 25 சதவீத படுக்கைகளை, தீவிர சிகிச்சை பிரிவில் வராதவர்களுக்காக ஒதுக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.

தனியார் மருத்துவமனைகளின், 'கிரேடு' களுக்கு ஏற்ப, இவர்களுக்கான சிகிச்சை செலவு, தினசரி, 7,500 ரூபாய் மற்றும், 5,000 ரூபாய்; தீவிர சிகிச்சை என்றால், தினசரி, 15 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதல்வரின் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம், 75 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பெறும், 1.58 கோடி குடும்பங்கள் பயன் பெறலாம். இந்த திட்டத்தில், பொது மக்களில் பெரும்பாலோர் பயன் பெறலாம்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X