பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் பாழாகும் மளிகை 6.76 லட்சம் மட்டும் விற்பனை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய, 500 ரூபாய் மளிகை பொருட்கள் தரம் இல்லாததால், இதுவரை, 6.76 லட்சம் தொகுப்புகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

தமிழகத்தில், மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், போக்குவரத்து சேவை முடங்கியது. பிற மாநிலங்களில் இருந்து, மளிகை பொருட்கள் வராததால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்து, மக்கள் சிரமப்பட்டனர்.

இதனால், கூட்டுறவு துறை சார்பில், மிளகு, சீரகம், புளி, பூண்டு உள்ளிட்ட, 19 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை, 500 ரூபாய்க்கு, ரேஷன் கடைகளில் விற்க முடிவானது. அதன் வெளிச்சந்தை விலை, 597 ரூபாய். மொத்தம், 2.08 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில், 10 லட்சம் தொகுப்புகள் மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டது. இதனால், அனுப்பிய ஒரு வாரத்தில் அனைத்தும் விற்று தீர்ந்து விடும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ரேஷன் கடைகளில், மளிகை தொகுப்பை வாங்க வந்த பலரும், அவற்றில் உள்ள பல பொருட்கள் தரமற்று இருந்ததாலும், வெளிச் சந்தையை விட, அதிக விலை இருந்ததாலும், வாங்காமல் திரும்பினர்.இதனால், கூட்டுறவு ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளில், மளிகை தொகுப்பு விற்பனை, ஏப்., 21ல் துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் வரை, 33.83 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6.76 லட்சம் தொகுப்புகள் மட்டுமே விற்றுள்ளன.விற்காமல் தேக்கம் அடைந்துள்ள பொருட்களை, ரேஷன் ஊழியர்கள் வாங்க வேண்டும் என, கூட்டுறவு அதிகாரிகள் நிர்பந்தித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X