அகரம் அகழாய்வில் தங்க நாணயம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அகரம் அகழாய்வில் தங்க நாணயம்!

Added : ஜூன் 17, 2020
Share
 அகரம் அகழாய்வில் தங்க நாணயம்!

சென்னை; சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு அருகேயுள்ள அகரத்தில் நடந்த அகழாய்வில், தங்க நாணயம் கிடைத்துள்ளது.தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறியதாவது:தமிழக தொல்லியல் துறை சார்பில், கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வும், அதை சுற்றியுள்ள அகரம், மணலுார், கொந்தகையில், முதல் கட்ட அகழாய்வும் நடைபெறுகிறது.

தற்போது, அகரம் என்ற ஊரில் நடைபெறும் அகழாய்வில், ஒரு தங்க நாணயம் கிடைத்துள்ளது. இது, 1 செ.மீ., விட்டமும், 300 மில்லி கிராம் எடையும் உடையது. கி.பி., 17-ம் நுாற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ளது.இதன் முன்பக்கம் நாமம்; அதன் நடுவில் சூரியன்; அதன் கீழ் சிங்க உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்பக்கம், 12 புள்ளிகள் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை, வீரராயன் பணம் என்று அழைத்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X