பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 70 மதுக்கடை ஊரடங்கு பகுதியில் மூடல்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; 'டாஸ்மாக்' நிறுவனத்தின், சென்னை மண்டலம், சென்னை மத்தி, வடக்கு, தெற்கு; காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு; திருவள்ளூர் கிழக்கு, மேற்கு என, ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், 912 மது கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, இந்த, ௯௧௨ மதுக் கடைகளும் மூடப்பட்டன. பின்னர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, ௬௭௯ கடைகள் தவிர, மற்ற மதுக் கடைகள் எல்லாம், மே, ௧௬ முதல் திறக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில பகுதிகளில், நாளை முதல், 30ம் தேதி வரை, தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. அதனால், மார்ச் இறுதியில் இருந்து இன்று வரை மூடப்பட்டுள்ள, ௬௭௯ கடைகளுடன், கூடுதலாக, ௭௦ மதுக்கடைகள், நாளை முதல் மூடப்பட உள்ளன. எனவே, சென்னை மண்டலத்தில், மொத்தம் உள்ள, 912 மது கடைகளில், மூடப்படுபவற்றின் எண்ணிக்கை, 749 ஆக அதிகரிக்க உள்ளது.சென்னை மற்றும் புறநகரில் வசிப்போர், நாளை முதல் மூடப்பட உள்ள, 70 கடைகளிலும், நேற்று அதிக மது வகைகளை வாங்கினர். அவற்றில் இன்றும், மது விற்பனை அமோகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X