பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டன், பிலிப்பைன்சில் இருந்து 293 பேர் வருகை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; பிரிட்டன், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சிக்கித் தவித்த, 293 இந்தியர்கள், இரு சிறப்பு விமானங்களில், நேற்று முன்தினம் இரவு, சென்னை அழைத்து வரப்பட்டனர். மத்திய அரசு, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

அதன்படி, பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து, இரு சிறப்பு விமானங்கள், நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்தன.பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து வந்த விமானத்தில், 141 பேர்; பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து வந்த விமானத்தில், 152 பேர் என, 293 இந்தியர்கள் சென்னை வந்தனர்.

விமான சேவைகள்சென்னையிலிருந்து நேற்று, டில்லி, கோல்கட்டா, மதுரை, சேலம், விசாகப்பட்டினம், திருச்சி, கோவை, பெங்களூரு, அந்தமான், ஐதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, கடப்பா, பேக்டோக்ரா, துாத்துக்குடி, கவுஹாத்தி, ராஜமுந்திரி நகரங்களுக்கு, 32 விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களிலிருந்து, 32 விமானங்கள் சென்னைக்கு வந்தன. தலைமறைவு ஆசாமி கைதுலண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு வந்த விமான பயணியரின், 'பாஸ்போர்ட்'களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னை, தி.நகரை சேர்ந்த, 35 வயது நபர், வரதட்சணை கொடுமை வழக்கில், தி.நகர் மகளிர் போலீசாரால், நான்கு ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி என, தெரிய வந்தது. அவரை, விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X