பொது செய்தி

தமிழ்நாடு

பருப்பு வகைகள் சாகுபடி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சென்னை; வேளாண் துறையின் தீவிர நடவடிக்கையால், ஊரடங்கு காலத்திலும், பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.குறுகிய காலத்தில் பலன் தருவதாகவும், குறைந்த நீர் தேவை உடையதாகவும், பருப்பு வகை பயிர்கள் உள்ளன.

எனவே, பச்சைப்பருப்பு, துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் சாகுபடியை அதிகரிக்கும் நடவடிக்கையில், வேளாண் துறையினர் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் ஆண்டுதோறும், 6 லட்சம் டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நடப்பு ஆண்டில், 8 லட்சம் டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதைகள், நுண்ணுாட்ட கலவை, உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் சுழற்கலப்பை உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், இத்திட்டத்தை செயல்படுத்த, 37.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக மட்டுமின்றி, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாகவும், பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உளளது.

வடமாநிலங்களில் விளைச்சல் குறைவாக இருப்பதால், வரும் நாட்களில் பருப்பு வகைகளுக்கு, நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.இதையடுத்து, பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்கும் முயற்சியை, வேளாண் துறையினர் கையில் எடுத்தனர். இதன் பயனாக ஊரடங்கு காலத்திலும், சாகுபடி பரப்பு, 60 ஆயிரம் ஏக்கரை நெருங்கியுள்ளது. சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக உற்பத்தி இலக்கை அடைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X