சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் கொரோனா சமூக தொற்றாக வாய்ப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புஉள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, மத்திய, மாநில அரசு கடந்த மார்ச் 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மக்களின் நலன் கருதி அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளின் காரணமாக, வெளிநாடுகளில் இருந்தும்,வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது சென்னையில் முழு ஊரடங்கு அறிவித்திருந்தாலும், முன்னதாகவே சென்னை உட்பட பல்வேறுபகுதிகளில் இருந்து வந்த மக்கள் அவரவரின்சொந்த ஊர்களில்தஞ்சம் அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறையினர், அவர்களது வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு பரிசோதனை செய்து, வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பல்வேறு இடத்திற்கும் குடும்பத்துடன் செல்வதாகவும், இதனால், கொரோனா தொற்று சமூகபரவலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சென்னையில் இருந்து வந்தவர்கள், தங்களை தனி மைப்படுத்திக் கொள்ளாமல் குடும்பத்துடன் கடைகளுக்குசெல்கின்றனர்.

நகர் முழுவதும், சென்னை வாகனங்களை காண முடிகிறது. இதே நிலை நீடித்தால், சமூக பரவலாக மாறி, காரைக்குடியும் சென்னை நிலைக்கு தள்ளப்பட்டு விடும். அபாயத்தை நோக்கி செல்லும் காரைக்குடியை, சுகாதாரத்துறையினர் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், வெளியிடங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திமுழுமையாக கண்காணித்து அவர்களுக்கு பரி சோதனை செய்து வருகிறோம்.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்லவாய்ப்பில்லை. மக்களும் சம்மந்தப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளிக்க முன்வர வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X