பொது செய்தி

தமிழ்நாடு

சீன எல்லையில் வீரமரணமடைந்த வீரர் பழனியின் உடல் சொந்த ஊர் வந்தது

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
palani, Madurai airport, ramanathapuram news, tamil nadu news,  Indian Army soldier Palani, Galwan Valley, india china border dispute, பழனி, ராணுவ வீரர், வீரமரணம்

ராமநாதபுரம்: சீன ராணுவத்தின் தாக்குதலால் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி உடல், அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் வந்தது.

அவரது குடும்பத்துக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பழனியின் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


latest tamil news




இந்திய சீன எல்லையின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ராணுவ வீரர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்ட கலெக்டர் வினய் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

முன்னதாக வீரமரணமடைந்த பழனி குடும்பத்திற்கு முதல்வர் பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்து இருப்பதுடன், 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
18-ஜூன்-202016:00:26 IST Report Abuse
vivek c mani நாட்டை பாதுக்காக்க,நாட்டு மக்கள் நிம்மதியாய் இருக்க தங்கள் நிம்மதியை இழந்து உயிரையும் இழந்து நம்மை காக்கும் இந்த ராணுவ வீரர்கள் உயர்ந்த கதியை பெறுவர். அன்னார் ஆத்மா ஷாந்தி அடையட்டும் . அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜூன்-202013:01:40 IST Report Abuse
தமிழ்வேல் 🙏🙏🙏
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
18-ஜூன்-202009:30:01 IST Report Abuse
Chandramoulli திரு பழனி அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது நாட்டிற்க்காக கடுமையான பனிப்பிரதேசத்தில் போராடி வீர மரணம் அடைந்து உள்ளார் . பழனி நாட்டிற்க்காக உயிரை துச்சமாக வைத்து சீனா வீரர்களுடன் போராடி உள்ளார் . நாம் சபதம் எடுப்போம் இந்த வேளையில் சீனா பொருள்கள் உபயோகம் செய்வதை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X