பொது செய்தி

இந்தியா

'டிக் டாக்' உட்பட 52 சீன செயலிகள் இந்தியாவில் முடக்க பரிந்துரை

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி; சீனாவுடன் தொடர்புடைய, 'டிக் டாக்' உட்பட, 52 'மொபைல்' செயலிகளை முடக்க, மத்திய அரசுக்கு, இந்திய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.இந்தியா சீனா இடையே, கடந்த சில நாட்களாக எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதையடுத்து, இந்திய அரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய புலனாய்வு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துஉள்ளன. சீனாவுடன் தொடர்புடைய மொபைல் செயலிகளை, இந்தியாவில் முடக்க வேண்டும் என்றும், அந்த செயலிகளை பயன்படுத்தக்கூடாது என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும், கோரியுள்ளது.

இதன்படி, 'ஜூம், டிக் டாக், யு.சி., பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர்' உள்ளிட்ட, 52 செயலிகளை முடக்கவேண்டும் என புலனாய்வு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.இந்த செயலிகள், நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், புலனாய்வு நிறுவனங்களின் இந்த பரிந்துரைக்கு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து, செயலிகளை முடக்குவது தொடர்பாக அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.ஒவ்வொரு செயலியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தடை செய்வது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும் என, கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
18-ஜூன்-202009:13:31 IST Report Abuse
Muthukrishnan,Ram சபாஷ் சரியான தகவல் ஸீனாக்காரனுக்கு இப்படி வியாபார ரீதியாக அடித்ததால் தான் நம்முடன் விரோதம் கொள்ளாமல் நட்புடன் இருப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X