ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்தியா வெற்றி உறுதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

நியூயார்க்; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல், நேற்று நடந்தது.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள், நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில், 10 நாடுகள், தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம், இரண்டு ஆண்டுகள். மொத்தம் உள்ள, 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில், ஐந்து இடங்களுக்கான தேர்தல், ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான, ஐந்து தற்காலிக உறுப்பினர் நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில், நேற்று நடந்தது. இதில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்துக்கு, இந்தியா போட்டியிட்டது.இதில், இந்தியாவுக்கு, ஆசிய - பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த, சீனா, பாகிஸ்தான் உட்பட, 55 நாடுகளும், ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், தேர்தலுக்கு முன்பே, இந்தியா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஐ.நா., வின், 193 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிகளும், ஓட்டுப் போடுவதற்கு வசதியாக தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்து. ஒவ்வொரு நாட்டுக்கான நேரத்தை தெரிவித்து, ஐ.நா., சபை தலைவர், திஜ்ஜானி முகமது பாண்டே, அனைத்து நாடுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

ஐ.நா., பொதுச் சபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப் பெட்டியில், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில், ஓட்டளித்தனர்.இந்தியாவுக்கு, அமெரிக்க நேரப்படி நேற்று காலை, 11:30 மணி முதல், 12:00 மணி வரை, நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்து நாடுகளும் ஓட்டளித்த பின், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X