பொது செய்தி

தமிழ்நாடு

கொந்தகையில்அகழாய்வு விஸ்தரிப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 கொந்தகையில்அகழாய்வு  விஸ்தரிப்பு

திருப்புவனம்:கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.

கொந்தகையில் சுரேஷ் நிலத்தில் இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில் 10 முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டு அதில் உள்ள எலும்புகள், மண்டை ஓடுகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் கதிரேசன்நிலத்தில் தென்னங்கன்றுகள் நடவு செய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் முதல் நிலை முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது, அந்த இடத்தில் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின.

தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில்,முதல்நிலை முதுமக்கள் தாழி இந்த இடத்தில் கிடைத்ததால் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளோம், நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடக்க உள்ளன. முதுமக்கள் தாழி கிடைத்த இடத்தை சுற்றிலும் தோண்டும் பணி நடைபெறுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X