தொற்றுள்ளோர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றோரை தேடும் சுகாதாரத்துறை பெண் போலீஸ் அதிகாரி எங்கே?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றுள்ளோர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றோரை தேடும் சுகாதாரத்துறை பெண் போலீஸ் அதிகாரி எங்கே?

Added : ஜூன் 18, 2020
Share

சிவகங்கை:சிவகங்கையில் கொரோனா தொற்றுள்ளோர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை பெண் போலீஸ் அதிகாரி உட்பட 100 பேரை சுகாதாரத்துறையினர் தேடிவருகின்றனர்.

டில்லி மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலமே சிவகங்கை மாவட்டத்திற்குள் கொரோனா தொற்று உறுதியானது. காலப்போக்கில் இது சமூக பரவலாக மாறி, அரசு மருத்துவமனையில்பணிபுரியும் 3 லேப் டெக்னீசியன்கள், பெண் டாக்டர், மேலுார் ரோட்டை சேர்ந்த டெய்லருக்கு பரவியது. உடல் நலக்குறைவால் இறந்த டெய்லரின் உடலை பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானது.

அவரது உடலை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று நகராட்சி தகன மேடையில் எரியூட்டினர்.டெய்லரின் இறப்பு நிகழ்ச்சிக்கு வந்து சென்றவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.அதே போன்று பெண் லேப் டெக்னீசியன் ஒருவர் வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த சென்னை பெண் போலீஸ் அதிகாரி உட்பட சிலரும் பங்கேற்றனர்.

இவ்விரு நிகழ்ச்சிக்கும் வந்த 100 க்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.60 பேருக்கு பரிசோதனைசுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இறந்த டெய்லரின்துக்க நிகழ்ச்சிக்கு வந்த 60 பேரின் ரத்தம்,சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இன்னும் பரிசோதனைக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X