வட்டிக்கு வட்டி நியாயமல்ல உச்ச நீதிமன்றம் கருத்து!

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

புதுடில்லி; 'ஊரடங்கு காலத்தில், வங்கிக் கடனின் வட்டிக்கு, கூட்டு வட்டி வசூலிப்பது நியாயமாக தெரியவில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஊரடங்கால், பெரும்பாலான தொழில்கள் முடங்கிக் கிடப்பதால், மக்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர். இதற்கிடையே, வங்கி கடனுக்கான தவணையை செலுத்த, ஆறு மாத அவகாசம் வழங்கி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. எனினும், இந்த சலுகை காலத்திற்கான வட்டி, பின்னர் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும், அந்த வட்டிக்கான கூட்டு வட்டியும், கடன் கணக்கில் சேர்க்கப்படும் என்றும், தெரிவித்து உள்ளது.

இயலாத காரியம்இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கஜேந்திர சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துஉள்ளார். இதை ஏற்க மறுத்த ரிசர்வ் வங்கி, 'வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கி களின் நிதியாதாரம் பாதிக்கப்படும்' என, தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''டெபாசிட் செய்தோருக்கு, வட்டி செலுத்த வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த வட்டியையும் தள்ளுபடி செய்வது என்பது இயலாத காரியம். ''தள்ளுபடி செய்தால், அது மோசமான விளைவை ஏற்படுத்தும்,'' என்றார்.

ஒத்திவைப்பு

இதையடுத்து, நீதிபதி அசோக் பூஷன் கூறுகையில், ''இந்த சலுகை காலத்திற்கான வட்டிக்கு, கூட்டு வட்டி வசூல் செய்வது நியாயம் இல்லை. எல்லாவற்றையும் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்காமல், இந்த விஷயத்தில், மத்திய அரசு தலையிடுவது குறித்து சிந்திக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, இது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை, ஆகஸ்டு முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X