வாசகர்கள் புகார்கள்: சிவகங்கை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

குடிநீர் வரவில்லை

சிவகங்கை 16வது வார்டு வினோபா தெருவில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதில்லை.

-கோவிந்தராஜன், சிவகங்கை

செயல்படாத ஏ.டி.எம்.,

திருமாஞ்சோலை பகுதியில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.,களில் பணம் இருப்பதில்லை.ஏ.டி.எம்., செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், திருமாஞ்சோலை

பள்ளம் நிறைந்த சர்வீஸ் ரோடு

சிவகங்கை- தொண்டி மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு செல்கிறது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பள்ளமாக இருப்பதால் தினமும் விபத்து நடக்கிறது.
-குமார், சிவகங்கை

எரியாத தெருவிளக்கு

சிவகங்கை - தொண்டி ரோடு 2வது குறுக்கு தெருவில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
-ராஜா, சிவகங்கை

அகற்றப்படாத குப்பை

சிவகங்கை- மஜித் ரோட்டில் அள்ளப்படும் குப்பை ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

-மீனாள், சிவகங்கை

முழுமையில்லாதபேருந்து நிறுத்தம்

திருப்புத்துார் வாரச்சந்தை முன்புறம் நிறைவடையாமல் உள்ள பேருந்துநிறுத்தத்தை புதுப்பித்து முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும்.
-கே.எல்.மணி, திருப்புத்துார்

பயன்படாத தொட்டி

திருப்புத்துார் முதல் வார்டு ஊரணிக்கரையிலுள்ள தொட்டி சேதமடைந்து பயன்படாமல் உள்ளது.மோட்டாரை பழுது நீக்கி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
-அரு.ராஜேஷ்கண்ணா, புதுப்பட்டி

மணல் குவியலால் ஆபத்து

திருப்புவனத்தில் சாலையோர மணல் குவியல்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

-செந்தில், திருப்புவனம்

திறந்தவெளி உணவகம்

திருப்புவனத்தில் உணவு பொருட்களை திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.

-ஈஸ்வரி, திருப்புவனம்

குப்பையால் சுகாதாரக்கேடு

திருப்புவனத்தில் தெருக்களில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
-சரஸ்வதி, திருப்புவனம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X