திருப்புத்துார்:திருப்புத்துார் வாரச்சந்தையில் நள்ளிரவில் நடைபெறும் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு பலமாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இங்குசமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.
இங்குள்ள மீன் மார்க்கெட்டில் 10 கடைகள் உள்ளன. முன்பு துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து மீன்கள் வந்தன. சில்லறை வியாபாரிகள் இங்கு ஏலம் விடப்படும் மீன்களை வாங்கி கிராமங்களில் விற்று வந்தனர்.தற்போது கொரோனா ஊரடங்கை அடுத்து மதுரை, சென்னை செல்ல வேண்டிய மீன்களும் திருப்புத்துார் வரத்துவங்கியது.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து மீன்கள் வரத்துவங்கின. பதப்படுத்தப்பட்டு வரும் இம்மீன்கள் விலை குறைவாகவும் உள்ளன.கொரோனாவில் வேலைவாய்ப்பில்லாத பலரும் மீன் விற்பதை புதிய தொழிலாக மேற்கொள்வதால் வழக்கத்தை விட அதிகமாக சில்லறை வியாபாரிகள் வருகின்றனர். அதிகாலை 1:00 மணிக்கே மார்க்கெட் களை கட்டுகிறது. ஏராளமான வாகனங்களில் வரும் வியாபாரிகள்முகக்கவசம், கையுறை, சமூக விலகல் இன்றிசெல்கின்றனர்.
சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து நுாற்றுக்கணக்கானோர் வருவதால் கொரோனோ பரவும் அச்சத்தில் உள்ளனர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிகாலையில் நடைபெறும் மீன்மார்க்கெட் வியாபாரத்தை முறைப்படுத்தவும், சுகாதார நடவடிக்கைக்காககூடுதல் பணியாளர் நியமிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE