பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: அரசு பணியாளர் சங்கம் முடிவு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
 கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: அரசு பணியாளர் சங்கம் முடிவு

சிவகங்கை:அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3 ஆயிரம் பல்நோக்கு மருத்துவ ஊழியர்களுக்கு, கொரோனா பணி காலமான 3 மாத சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிக்கும் அரசை கண்டித்து, ஜூன் 25ல் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தாருடன் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்,'' என அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் 3 ஆயிரம்பல்நோக்கு மருத்துவ ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள்மூலமே மருத்துவமனை துாய்மை பணி, உள்நோயாளிகள் கவனிப்பு, கொரோனா தடுப்பு பணி, தொற்று கண்டறியும் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பணியில் சேர்ந்து 8 ஆண்டுகளாகியும் இவர்களுக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.

3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை தான் சம்பளம் வழங்குகின்றனர்.தற்போது கொரோனா பேரிடரில் ஒட்டுமொத்த மக்களும் வாழ்வாதாரம் பாதித்த நிலையில், இப்பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. அன்றாட உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பல்நோக்கு மருத்துவ ஊழியர்களுக்கான 3 மாத சம்பளத்தை தமிழக அரசு உடனே வழங்காவிடில், ஜூன் 25 அன்று அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மருத்துவ ஊழியர்கள் குடும்பத்தாருடன் குடியேறும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X