பொது செய்தி

தமிழ்நாடு

சுயக்கட்டுப்பாடு விதித்துக் கொள்ளும் கிராமங்கள்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கீழச்சிவல்பட்டி:திருப்புத்துார் அருகே கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தவிர்க்க கடை வியாபார நேரத்தை தாமாகவே குறைத்துள்ளனர்.

திருப்புத்துார் கிராமங்களில் முதற்கட்ட ஊரடங்கின் போது மக்கள் தாமாகவே தங்கள் ரோடுகளை மூடி வெளியிலிருந்து வரும் போக்குவரத்தை தடை செய்தனர். தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே வாங்கி விற்பனை செய்து கொண்டனர். தற்போதும்கொரோனா ரைவஸ் பரவல் அதிகரிப்பை அடுத்து அதுபோல் முடிவு எடுக்கத் துவங்கியுள்ளனர்.

வர்த்தக சங்கத்தினர்காலை 6:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை கடை திறக்க முடிவு செய்துள்ளனர்.அத்தியாவசிய பொருட்களான மருந்து, பால், உணவு பொருட்களுக்கு கூடுதல் நேரம் அளித்துள்ளனர். உணவு பொருட்களைபார்சல் மட்டும் அனுமதிக்கவும் முடிவு செய்துஉள்ளனர். காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கவும், சந்தைக்கு தடை விதித்தும் உள்ளனர்.

இந்தக் கட்டுப்பாட்டை கீழச்சிவல்பட்டி, விராமதி, முத்துார், கல்லாப்பேட்டை உள்ளிட்ட 15 கிராமங்கள் பின்பற்றுகின்றனர்.மேலும் பள்ளிக் கட்டடத்தில் அரசுடன் இணைந்து தனிமைப்படுத்தும் மையம் துவக்கவும் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X