அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை: விஜயபாஸ்கர் தகவல்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை: விஜயபாஸ்கர் தகவல்


சென்னை : ''தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் குறையவில்லை; அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நாளை முதல், 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கொரோனா தடுப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், அம்மா மாளிகையில் நேற்று நடந்தது.


ஆலோசனைக்கு பின், மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி:
மண்டல வாரியாக விரிவான ஆய்வுக்கு பின், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில், 200 வார்டுகளிலும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன.
அரசு தனது கடமையை செய்து வருகிறது. மக்களும், தங்களது கடமையை செய்து, கொரோனா சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டும். கொரோனா தொற்று சமூக பரவலாக, மாறாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''ஒருநாள் ஏற்றம், இறக்கத்தை வைத்து, கொரோனா பாதிப்பு குறைந்ததாக கூற முடியாது; அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதிக பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து குறைந்தால் தான், முழுமையாக தொற்று குறைந்ததாக கருத முடியும்,'' என்றார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில், ''முழு ஊரடங்குக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்புடன் வீட்டில் இருக்க வேண்டும்,'' என்றார்.
ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் காமராஜ், பாண்டியராஜன், அன்பழகன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
18-ஜூன்-202020:08:11 IST Report Abuse
Visu Iyer முதல்வர் படிப்படியாக குறைகிறது என்று சொல்கிறார்.. இவர் உயரும் என்று சொல்கிறார்.. குறையவில்லை என்றால் எதற்கு தளர்வு ...? இப்படி தான் முன்னாள் முதல்வர்.. மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த ஜெயலலிதா உடல் நலன் பற்றிய விவரத்திலும் கருத்து சொன்னார்கள்.. பார்த்ததாக ஒருவரும் பார்க்கவே இல்லை என்று இன்னொருவரும்.. ஆட்சி பொறுப்பில் இருந்த அன்றைய முதல்வர் நலனில் அக்கறை அவ்வளவு அக்கறை காட்டியவர்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக ஆளுக்கு ஒன்று சொல்கிறார்கள்.. பார்க்கலாம்
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
18-ஜூன்-202012:10:12 IST Report Abuse
R. Vidya Sagar கோயம்பேட்டில் கோட்டை விட்டதற்கு பொறுப்பு எடுத்து கொள்வாரா?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜூன்-202007:55:30 IST Report Abuse
RajanRajan இன்னும் நுறு டாஸ்மாக்கை திறந்து விட்டு பாருங்கப்பா. ஏதாச்சும் சில்லறை தேறுதானு பார்க்கலாம். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X