அரசு நிதி வீணடிப்பால் விவசாயிகள் கவலை களரியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
  அரசு நிதி  வீணடிப்பால்  விவசாயிகள் கவலை களரியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்

உத்தரகோசமங்கை:உத்தரகோச மங்கைஅருகே களரியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்து காணப்படுவதால் விவசாயிகள்நீரை தேக்க வழியின்றி கவலையில் உள்ளனர்.

திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட களரியில் 17 மீ., நீளத்தில் ரூ.7.78 லட்சம் செலவில் கடந்த 2018 செப்.,10 அன்று தடுப்பணைகட்டும் பணி துவங்கியது.தரமற்ற கட்டுமானப் பொருட் களை பயன்படுத்தி, கட்டப்பட்டதால்,தடுப்பணை நோக்கம் கேள்விக்குறியாக உள்ளது.

உத்தரகோசமங்கைகண்மாய் பகுதியில் இருந்து வெள்ள நீர் சிற்றோடை, களரி வழியாக, ஆனைகுடி, மோர்க்குளம்,கொட்டகுடி ஆறு வழியாக சேதுக்கரை கடலில்கலக்கும். விவசாயி களின் நீண்டநாள் கோரிக்கையைஏற்று களரியில் 75 எக்டேர் பாசன வசதி பெற இரு இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டது.விவசாயிகள் கூறியதாவது: திருப்புல்லாணி ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கடந்த 2019ல் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி நடந்த சில மாதங்களிலேயே சிமென்ட் பூச்சு உதிர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.

களரியில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த அக்., நவ., டிச., மாதங்களில் பெய்த மழையில் தடுப்புச்சுவரின் கீழ்பகுதியில் பலத்த அரிப்பு ஏற்பட்டு வீணாக வெள்ள நீர் வெளியேறியது. ஓடையின் வரத்துப்பகுதிகளை துார்வாராமல் விட்டுள்ளனர். சுற்றுவட்டார விளைநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வழியில்லாமல் வறண்டு காணப்படுகிறது.மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த தடுப்பணைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X